பக்கம்:மருதாணி நகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 145

“ஒறவு முறிஞ்ச நேசம் இனிமே ஒட்டாதுங்க!... நான் போயிட்டு வாரேனுங்க!” என்று முழங்கினுள் அவள்.

"அப்பிடியா? ... ம் ... இந்தர்ப் பாரு ங் கிறேன் புள்ளே!...இந்தச் சாமான்களா நானு ஒனக்குத் தந்தது? நான் ஒனக்குத் தந்தது அத்தனையும் பினங்குச் சாமான் களாச்சுதே?...ராவுலே கொண்டாந்து ராங்கி பேசிக் கொடுத்தாக்க,மாத்துப் புரியாதின்னு ரோசிச்சுப்புட்டீயா? பலேடான்னுளும் பவுசுக்காரப் பயமவன்!...”

வெம்புலிக் கொடுமைச் சித்தனு அவன்?

கன்னி மனத்தைக் கன்னி இருட்டு விழுங்கிக் கொண்டிருந்தது!

மனமாலையை ஏந்த வேண்டிய ஏந்திழையாள் கண்ணிர் மாலையை ஏந்தினுள் !

போதுமா ?

முடிந்ததா கதை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/147&oldid=612052" இலிருந்து மீள்விக்கப்பட்டது