பக்கம்:மருதாணி நகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மருதாணி நகம்

வில்லையானுலும், அவளதுகண்ணிரை உணர்ந்திடநேரம் காத்துக்கிடந்தது. அவளது மலர் விரல்கள் விரைந்து, சுட்ட நீரைத் தொட்டுத் துடைத்தன, அவள் எழுந்து நின்ருள். "இந்தாலே இருக்குது ஒங்க சாமான் சாடாவும் கணக்குப் பார்த்துக்கிடுங்க. இப்பவே முதலிச்சுப் பேசிப் பிட்டேன்...!" என்ருள். தோல்வியின்பின் விளைந்த கடைசி வெற்றிக் களிப்பின் ரேகை அவளது இதழ் மருங்கில் ரேகை பாய்ச்சிற்று.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, அவள் கொணர்ந்தவற்றை சாவதானமாக உற்றுநோக் கின்ை. ஆரியக்கூத்தாடினுலும், காரியத்தில் கண்வைத் திருந்த முத்தையன், இருந்திருந்தாற்போல பேயறை பட்டவனை யொப்பச் சிரிக்க முனைந்தான்.

"பாவம், பொண்ணுய்ப் பொறந்தது நீ!...யார் யாரை எல்லாமோ நீ நம்புறே! அதுக்குண்டான பலாபலனை நீ கைக்கு மெய்யாப் புரிஞ்சுக்கிட வேண்டிய நேரமும் கால மும் கூப்பிடு தொலைவிலே தான் இருக்குது ம்...பஞ்சவர் ணம் ! நான் முன்னே ஒனக்குத் தந்த சாமான் சட்டுகளை நாக்கிலே நரம்பில்லாம மறு வாட்டித் திருப்பிக்கேட்டதை வச்சு நீ என்னை இழிவாத்தான் நெனச்சிருப்பே. அது எனக்கு அத்துபடிதான். ஆன, நானு இப்பிடிச் செஞ்ச துக்குத் காரணம் என்ன தெரியுமாலே ? அப்பிடி யாச்சும், ஒம்மனசு மாறி, அது எம்பக்கம் மடங்கித் திரும் பாதாயிங்கிற நப்பாசைதான் அதுக்கு உண்டான காரணம்!...இப்ப சொல்லு. நாளைக்கே நம்ப கண்ணுலத் துக்குப் பரிசம் வச்சுக்கிடலாம் !...”

இப்பொழுது பஞ்சவர்ணத்திற்கு பேய்ச்சிரிப்புச் சிரிக்க கெடுவு போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/146&oldid=612051" இலிருந்து மீள்விக்கப்பட்டது