பக்கம்:மருதாணி நகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 143

நல்லவுக ரெண்டுபேரைக் கேட்டாக்க, காதும் காதும் வச்ச கதையிலே ம ச் சா ன் ஆட்டைக் காட்ட மாட்டாகளாக்கும்!... ஆளுக்க... அந்தத் தங்கச் சரட்டுக்கு என்ன கடவு செய்யிறது?...பூ இதுக்குத்தான மாயம் புரியாது?...மணியக்கார ஐயா மனக்கிலேசம் தெளிஞ்சடி யும், அவுககிட்ட சேதியைப் புட்டுச் சொல்லி, பணம் காசு வாங்கி,அதை எடுத்துக்கிட்டுப்போயி நாகுடிச் சாமிகிட்ட கொடுத்துப்புட்டு, அடகு வச்சிருக்கிற எங்க மச்சாைேட அந்தத் தாலிச்சரட்டை மீட்டுக்கிட்டு வந்திர வேண்டியது தான் ! ஆன .சே..என்னு இந்தப் பேய் மனசு பேயாட் டம் போட்டுக்கிட்டு, சும்மா சும்மா சம்சயப் பூதங்களை ஏவிக்கினே இருக்குது எனக்கு அந்த முத்தையா மச்சான் அந்தக் காலத்திலே சீரளிப்புத் தந்த துணிமணி பொருள் கணக்கிலே அப்பிடியே அச்சுக் குத்தினதொப்ப இதுக அம்புட்டும் எப்பிடி இந்த நாகுடிச் சாமியாடி அய்யா கையிலே கெடைச்சிருக்கும்?. சரி, சரி ; அல்லா குட்டும் அப்பாலே வெளிச்சம் காட்டாமயா தப்பப் போகுது?... ஆத்தா மூத்தவளே! எப்படியோ என் மானத்தை மட்டுமரிவாதையோட காப்பாத்தினியே, அதுவே எனக்கு லெச்சாந்தரம் !...”

ஒளி கக்கின. மருதாணி நகத்தைப் பார்த்துக்கொண் டிருந்த பஞ்சவர்ணத்தின் விழிக்கடையில் அவளுக்கும் தெரியாத வகையில் சுடுநீர் வேலி கட்டியிருந்தது.

"பஞ்சவர்ணம், இந்தாலே...எதுக்கு நீ ஒம்பாட்டுக்கு தனியே குந்திக்கினு கண் கலங்குறே?" என்று கேட்ட வாறு அங்கு வந்த்ான் முத்தையன், வயலில் நீர் இறவை முடிந்து திரும்பிய அவனுக்கு சோர்வு முண்டிருந்தது.

முத்தையனின் குரலைக் கேட்டதும், அவனது அன்பை உணர்வதற்கு அவளுக்குப் பொழுது கான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/145&oldid=612050" இலிருந்து மீள்விக்கப்பட்டது