பக்கம்:மருதாணி நகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 147

தொலைவுக்குத் துல்லியமாகத் தெரிந்துவிடக் கூடுமா,

என்ன?

கூடிப்பிடித்த மஞ்சிவிரட்டுப் பொலி காளை யாக ஆவணத்தாங் கோட்டை வட்டத்தில் வட்டமிட்டு, தன்னைச் சூழ ஒர் இலட்சுமணன் கோட்டையும் கிழித்துக் கொண்டு, தன்னைப் பிடிக்க உப்புக்கோடு மறித்து பலிஞ் சடுகுடு விளையாடுக் கொண்டிருந்த நாட்டுப்புறத்து மன்மத ராசாக்களுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு, காலத்தை ஒட்டியவாறு, வாழ்க்கைப் பந்தயத்தின் முடிவை இலக்கு வைத் து ஓடிக் கொண்டிருந்த அவளுக்கு வாய்த்திட்ட ஆசை மோகங்கள் ஒன்றல்லவே இரண்டல்லவே?...

வழிந்த விழி நீரை வழித்து விட்டபடி, அவள் தலையை நேர்வசமாகத் திருப்பினுள்.

வாழ்க்கை திரும்பவில்லை. வழி வகையும் திரும்ப வில்லை. ஆனல், முத்தையன் திரும்பிவிட்டிருந்தான். தன்னுடைய வாய் மொழிச் சொற்களை அவ்விடத்தே மண்ணுளிப் பாம்பாக வளையவிட்ட வண்ணம்!

பாவம், பொண்ணுப் பொறந்த நீ, யார் யாரை யெல்லாமோ நம்புறே! அதுக்கு உண்டான பலா பலனை நீ கைக்கு மெய்யாப் புரிஞ்சுக்கிட வேண்டிய நேரமும் காலமும் கூப்பிடுற தொலை விலே தான் இருக்குது!...”

பஞ்சவர்ணத்தின் அடிமனம், அடிபட்ட வலி தாள மாட்டாமல் வாட்டம் கண்டு. ஆளுல் வடிவுமீள மாட்டா மல், வீங்கிப் பொருமிக் கண்ணிர் கழித்தது. கண்ணிரின் முள் முனையிலே அவளது எதிர்காலம் மட்டுமா ஊச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/149&oldid=612054" இலிருந்து மீள்விக்கப்பட்டது