பக்கம்:மருதாணி நகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மருதாணி நகம்

லாடியது? அவளுக்குரிய மானம் மரியாதை அனைத்தும் ஊடும் பாவுமாகச் சேர்ந்தல்லவா அல்லாடித் தள் ளாடின?

"நாளைக்குப் பொழுது படுறதுக்குள்ளே, எம்புட்டு பொருளுக முச்சூடும் எங்கைக்கு வந்துசேர வேணும. இல்லாங்காட்டி, எனக்கிண்ணு ஊருப்பஞ்சாயம் கூட்டின ஒனக்கும் நாளைக்கு ஊருப்பஞ்சாயம் வைக்காம நானு பாயிலே தலைசாய மாட்டேனுக்கும்!...”

சேலைத் தலைப்பை எடுத்துச் சுருட்டி, வாயில் திணித் துக்கொண்டாள். அதற்கு மசிந்து விடவில்லை வாய் அழுகை. எங் கஷ்டம் முடிஞ்சி போயிருச்சு தின்னு, சாமி யாடி அய்யா சாமான்களைத் தந்தடியுமே நெனச்சு, திகைச்சு சந்தோசப்பட்டுப்போய், தொம்பங் கூத்தாடிச்சி கணக்கா மானத்துக்கும் மண்ணுக்குமாக் குதிச்சேன். ஆன. இப்ப எங் கஷ்டம் முடியலே என்னுேட கதை தான் முடியப்போவுது! இந்த மச்சான் இப்பிடி ராவணக் கோவம் கொண்டு, என்னைப் பாடாப் படுத்துதே?... பொட்டைக் குட்டியின்னக்க, பிசாசுகூட புளியங்கொம் பிலேருந்து இறங்கிவந்து, மனசும் இரங்குமின்னு ஒரு வாக்கு நிலைக்குது. இப்பைக்கு இந்த ஆம்பளை என்னைப் பழிக்குப்பழி வாங்கப் பாக்குதே! அன்னிக்கு ஒரு நாளைக்கு இவக எனக்குத் தந்த சாமான் சட்டுகளாட்டமே தானே இந்தச் சாமான்களும் ஒரே அச்சாயிருக்குது ! நாகுடிச்சாமியாடி அய்யாகூட அப்பிடித்தானே சொல்லி, எம் மனசுக்கு வல்லமை ஊட்டுளுக! இதுகளும் பினுங்கு சீமை சாமான்கதான், தங்கச்சி! இதைக் கண்டதும், முத்தையன் மனசு மலைச்சுப்போயிரும், எப்பிடி இம்மாஞ் சாமானும் ஒங் கைக்கு கெட்ெச்சிதின்னு! கெடுவான் கேடு நினைப்பான்னு சும்மாவ சொல்லிப் போளுக?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/150&oldid=612055" இலிருந்து மீள்விக்கப்பட்டது