பக்கம்:மருதாணி நகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மருதாணி நகம்

"சும்மா வாயைக் கொட்டாதீங்க, கதை எல்லாம்

முடிஞ்சு எம்மாங் காலமோ ஆயிருச்சுதே!”

"எவன் சொன்னது? இப்பத்தானே ஒங்கதையே புதுசா ஆரம்பமாகப் போவுது?"

"ஊம், ஒங்களோட எனக்கு என்னு பேச்சு? நானு: நடக்கிறேன். ஒங்க மனசுப்படிக்கு நீங்க தந்த சாமான் சட்டுகளை இப்ப என்னலே அப்பிடியே படைச்சுத் தந்துப் பிடுற சக்தி எனக்குக் கெடையாதுங்க! அதாலே...!"

'அதாலே...?”

"அதுக்கு உண்டான முடிவை நீ ங் க த ன் சொல்லோனும்!”

"என்ளுேட சாமானுக பூராப் பொழுது கழியறதுக் குள்ளாற எங் கைக்கு வந்தாக வேணும். இல்லாங் காட்டி...?”

இல்லாங்காட்டி..?

"ஒம் மானம் மருவாதையை வாங்கறதுக்கு விடிஞ்ச தும் விடியாததுமா ஊருப்பஞ்சாயம் கூட்டி, ஊருக் காருவார்க்காரங்களை தனது வச்சு ஒனக்கு கட்டுமானம் வச்சுப்புடுவேன்!” என்று அகங்காரத் திமிர் விரிந்த குரலுடன் முத்தையன் பேசி முடித்தான். அரும்பு பாய்ந்த மீசையை கைலாகு பிடித்துத் தடவி விட்டான். கைவிளக்கை பஞ்சவர்ணத்தின் வதனத்திற்கு நேர்வச மாகப் பிடித்தான். அப்போது அவன் சிரித்த அகம் பாவச் சிரிப்பை அவள் காணவும், அதே நேரத்தில் அவள் அலட்சியமாகச் சிரித்த ஆணவச் சிரிப்பை அவன் தரிசிக்கவும் ஒரு நல்லவாய்ப்பு கிட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/154&oldid=612059" இலிருந்து மீள்விக்கப்பட்டது