பக்கம்:மருதாணி நகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 151

கொண்டுகிட்டு வந்து, எம் மனசுக்கு உகந்த சாமியாகவே ஆயிட்டாரு!...சாமியே, இனிமே எனக்கு ஒங்களைத்தவிர வேறே போக்கிடம் இல்லே!...”

இவ்வாறு, அவள் ஆடி ஓடி வந்த தேராக நின்ற பொழுது, அவளுள் முடிவொன்று தோன்றியது. அந்த முடிவை ஆதரித்தால் நடக்கக்கூடியது என்ன, ஆதரிக் காவிட்டால் நடக்கக்கூடியது என்ன என்கின்ற ஆராய்ச்சி செய்யக் காலம் இல்லை. ஆனல், சரி, நடக் கிறது நடக்கட்டும்...என் மனசுக்கு ஒப்பத்தான் நான் இனிமே நடந்தாக வேணுமாக்கும் ! என்று தீர்மானம் செய்தவளாக, அவள் தட்டை எடுத்துக்கொண்டு, திரும் பின நேரத்தில், கிழவி சீரங்கம் வந்து சேர்ந்தாள். கன்னிப் பாவைக்கு திகிற் பூண்டை மிதித்த மாதிரி இருந்தது. “விடிஞ்சடியும் வாரேனுங்க அயித்தை!...” என்று சொல்லிப் புறப்பட்டாள். அப்பொழுது, "நில்லுங் கறேன்” என்ற அதிகாரத் தொனி அவளுக்குத் தடைகல்' ஆனது. 'தடை கழிந்த மாதிரி, அங்கிருந்து புறப்படப் போனவளுக்கு மீண்டும் முட்டுக்கட்டை விழுந்தது.” திரும்பினுள்.

"பஞ்சவர்ணம்!”

' என்னுங்கிறேன்!”

“என்ன அழைக்கிறது துடுக்கா யிருக்குதே?"

"நீங்க என்னமோ முந்தானை போடப் போறவளைக் கூப்பிடுற ரீதியிலே கூப்புட்டதுக்கு பதிலுக்குப் பதிலுப் போல நானு ஒங்களைக் கூப்பிடுறேன். அம்புட்டுத்தான்

கதை!”

"கதை அம்புட்டுமில்லே இம்புட்டுமில்லே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/153&oldid=612058" இலிருந்து மீள்விக்கப்பட்டது