பக்கம்:மருதாணி நகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மருதாணி நகம்

ஆகுறது? அதே இமைப்பில், இமைபாவாத கண்ணின் மணிகளைச் சுற்றிலும் அந்நிகழ்ச்சி, நடந்து காட்டியது.

உதயம் இதழ் அவிழ்ந்த இனிய பொழுது அது. இரவில் கைவிரல் நகங்களில் அப்பிக்கொண்டு படுத் திருந்த மருதாணி அப்பொழுது படல்படலாகக் காய்ந்து உதிர்ந்திருந்தது, மருதாணி நகம் அழகாகக் காட்சி தந்தது. நம்ம சாதி சனம் தலைக்கட்டுக்குள்ள, நம்ம ஊருச்சட்டப்படிக்கு, ஊர் வெத்தலைபாக்கு வச்சு, பெசண் ணுக்குப்பரிசம் போட்டு, திருப்பூட்டினதும், பொண்ளுேட நகத்துக்கு மாப்பிள்ளை மருதாணி பூசுறது வளமை. மருதாணி நகத்துச் செவப்புப்போல, நெத்திச் செவப்புப் பொட்டும் அந்தம் மாரும இருக்கோனுமிங்கிறது சடங்கு. இப்ப, அதுக்கு முன்னடியே நானு ஒனக்கு மருதாணி பூசிப்புட்டேனுக்கும் ! என்று மெளட்டிகம்',வம்பு பேசிய முத்தையனைக் காணுமற் போனலும், அவனது வார்த்தை களைக் கண்டாள்.

எண்ணியதை எண்ணி நிறுக்கவிடாமல், வேருெரு நினைவு பஞ்சவர்ணத்தை ஆட்கொண்டது. இந்த ஒரு நடப்பை நானு எம்மாங் கடுத்தம் மனசுக்கு வாங்கி நெனைக்கப் பிடாதின்னு மெனக்கட்டுக் கிட்டிருந்தேன். இப்ப வந்து அது என் மனசை அரிச்செடுக்குதே!... முத்தி ஒரு நாளு, இந்த முத்தையன் மச்சானைப்பத்தி - ாததும் பொல்லாததுமாப் பேச்சு காதிலே விழுந் திச்சே! இந்த மனுசன் தன் அப்பன்காரக தேடிவச்ச அக்கரைச் சீமைப் பணத்தை குடி, கூத்தியின்னு கல்லாக் கரியாப் போக்கடிக்கிறதாச் சேதி வந்து, அன்னிக்குப் பொழுதண்ணைக்கும் தூங்காம, விடிஞ்சு எழுந்திருச்சதும் மனசு கிலேசப்பட்டுக் கிட்டே இருந்திச்சு, அந்த நேரத் திலே தானே மூக்குடி மச்சான் சாமி யொப்ப உருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/152&oldid=612057" இலிருந்து மீள்விக்கப்பட்டது