பக்கம்:மருதாணி நகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754. மருதாணி நகம்

காணப்பட்ட ரவிக்கையை மாரகச்சேலே முனையினுல் அழுத்தி மூடிக்கொண்டு நடந்தாள். முருங்கைமரம் வழி விட்டது. காட்டுக் கற்ருழைச்செடி பாதை காட்டியது. இருட்டோ, அவளுடன் கண்ணுமூச்சி விளையாடியது. நடந்தாள். நடை .ெ ம லி ந் த து. நடந்தாள் நடை வளர்ந்தது!

சக்திவேல் திடலை ஒட்டிவந்ததும், காலாரக் கொஞ்ச நாழிகை நின்ருள் அவள். இரைப்பு எடுத்தது. அருகி ருந்த பாம்புப் புற்றை உற்றுநோக்கினுள். மெய் சிலிர்த் தது. மீண்டும் கிழக்குத் திசையை வசப்படுத்தியவாறு அடி ஒற்றி, அடிஎடுத்து, தடம் கண்டு, தடம் விலக்கி, ஒற்றையடிப் பாதைக்கு மருகின சமயத்தில், அவள் வீடு தென்பட்டது. அப்பொழுது, "பஞ்சவர்ணம்” என்ருெரு குரல் கேட்டது.

அங்கே முத்தையன் காணப்பட்டான்.

"வல்லுருட்டம் ஏதுக்கு என்னத் துரத்திக்கினு

வாரீங்களாம் ?”

"நான் வல்லூறு இல்லே, அம்மான் பொண்னே! பஞ்சவர்ணக்கிளிக்கு உகந்த ஜோடிக்கிளி நான் எம்புட்டு இந்த ஒரு சந்தேகத்துக்கு மட்டும் நீ சவாப்புச் சொல்லிப் பிடு, போதும்! என்ன நீ அந்தக் காலத்திலே களத்து மேட்டிலேயும், முதல் காளாஞ்சி வாங்கின தேர்த் திரு நாளப்பவும், கூட்டாஞ்சோறு உண்ண சமயத்திலவும், கம்மாய்க்கரையிலேயும் நொடிக்கு நூறு கடுத்தம் கண்டு தண்டிக்கிட்டு ஆசையாப் பேசின நீயா இப்ப என்னை வைரியா நெனச்சுப்புட்டே? நான் அன்னிக்கு-அதான், நீ என்னை விசாரிக்கிறத்துக்காவ பஞ்சாயம் கூட்டி னப்போ-நான் திடுதிப்பின்னு கிணத்திலே குதிச்சேனே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/156&oldid=612061" இலிருந்து மீள்விக்கப்பட்டது