பக்கம்:மருதாணி நகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் # 55

அது ஏன்னு தெரியுமா? ஒனக்கு என்னைப்பத்தின கவலை எப்படி இருக்கும்? நானே அதுக்குள்ள பதிலையும் புட்டு வச்சுப்புடுறேன். என்னைப் பத்தி யாரோ கெட்டண்ைணத் திேைல உங்கிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லி அதை அம்புட்டையும் நீயும் நம்பின சங்கதியைக் கேள் விப்பட்டதும்தான், நான் அப்பிடிக் கிணத்துக்குள்ள குதிச்சேன். இதை நீ நம்பு ; இல்லே, நம்பாம இரு. ஆளு, நீநெனைக்கிறமாதிரி நான் தப்புத்தண்டா ஆசாமி இல்லே அந்த ஆளு கோலப்பன் விசயமா நடந்துக்கிட் டது கூட, எனக்குப் போட்டியா அந்த மனுசன் வந் தானேயின்னுதான். அதாலேதான் இப்படிக் கொத்த குந்தகம் மூண்டிருச்சு. உன் சோளக்கொல்லைக்குத் தீ வைக்கச் செஞ்ச கெடும்புகூட அந்தப் பழங்கதையின லேயே தான்! ம்... ஒன்னைத் தவிர, எம் மனசிலே வேறே எந்த ஒரு குட்டிக்கும் இடம் கெடையாது, பஞ்சவர்ணம் ! ஆத்தா சத்தியம் இது !... ஆமாலே!”

முத்தையனுக்கு அழக்கூடத் தெரியும் !

அந்நேரத்திற்கென்று, வள்ையற்காரக் கிழவர் அவ் வழியே திரும்பினர். உடனே முத்தையனை நடுவழியில் நிறுத்திவிட்டு, விட்டவழியைத் தொட்டவளாக அவள் வழியைத் தொடர்ந்தாள். -

அப்பொழுது கிழவர் அவளிட்ம் சொன்னதாவது: "தங்கச்சி!...ஒங் கண்ணுலச் சோறு எப்பம்மா கெடைக் கும் ? வேளை கூடிவரப் போகுதின்னு பேச்சு வந்திச்சு. உண்டன சந்தோசப்பட்டேன். எங்க அக்கரைச் சீமைப் புள்ளைக்குக்கூட சம்பந்தம் சாடிக்கை திகைஞ்சிருச்சு. அதொட்டித்தான் எனக்கு அங்கிட்டுஇங்கிட்டு நகரவாய்க் கலே இப்பத்தான் நெனப்புக்கு வருது. முன் ஏர் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/157&oldid=612062" இலிருந்து மீள்விக்கப்பட்டது