பக்கம்:மருதாணி நகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 56 மருதாணி நகம்

வழித்தான் பின் ஏருன்னு சொல்றதுண்டு. அதுபோலத் தான், இப்ப ஒன் கைக்குள்ளே கோலப்பன் இருக்குதாம்: நாகுடிச் சாமியாடி கூட ஒம்பேரிலே ஒசந்த அளவுக்குப் பாசம் வச்சிருக்காரு ஒன் அப்பனுக்குசெஞ்ச தீவினைக்குப் பரிகாரம் செஞ்சுக்கிட வேண்டித்தான் அவரு ஒன் விசயத்திலே கருக்கடையா இருக்காராம்!... முத்தையன் ஒனக்குத் தந்த சாமான் சட்டு மாதிரியே அவரு உங்கிட்டே சேர்ப்பிச்சாரே, அதோட கமுக்கம் ஒனக்குத் தெரிய வாய்க்காது. ஒனக்குத் தந்த சா மா ன் க போலவே இன்னுெரு ரகத்தை அந்த முத்தையன் வச்சிருந்ததைத் துப்புக் கண்டு நாகுடிச் சாமியாடி போயி அவனைக் கே ட் டு த் தனது பண்ணிப் பேசி, ஒம் மனசை அவன் பக்கம் சாய்க்கிறதாகப் பொய் சொல்லி, அல்லாத்தையும் சேகரம் செஞ் சிக்கிட்டு வந்தாராம். முத்தையன் கிட்ட அவனேட சாமான்களை உன் மூலம் வீசிப்புட்டாக்க, அப்பாலே ஒன் மானம் தப்பிப் பொழைச்சிடு மிங்கிற ஆசைதான் அன் ரோட இந்த விளையாட்டுக்குக் காரணம், தங்கச்சி!... இன்னுெண்ணு! ஒருநாளு, கோலப்பன் உங்கிட்டே தந்த அந்தத் தங்கத்தாலிச் சரடுகூட, நாகுடிச் சாமியாடி யேர்டது தானும். அது அவருகிட்டவே வந்திருச் சாமே!...ஈடுக்கு வாங்கின. அதைத் திரும்பி ஒனக்கே கோலப்பன் மாருபத்திலே தந்திட வேணுமின்னும் சொன்னுரு. மணியக்கார ஐயாகூட, சாமியாடி இம்மாம் நல்ல புள்ளியான்னு தெகைச்சுப் போயிட்டாராம்!...”

கவலையுடையார்க்குக் கண்ணுறக்கம் வராது!

பஞ்சவர்ணம் தன் வீட்டிற்குள் துை էք ந்து புகுந்தர்ள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/158&oldid=612063" இலிருந்து மீள்விக்கப்பட்டது