பக்கம்:மருதாணி நகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அழுகை சிரித்தது!

இருட்டில் புகுந்தவளுக்கு வீட்டின் வெளிப்புறத்துக் காரைமுள் வேலிப்படல் தாழ்விலக்கிக் கிடந்ததைப்பற்றி

எப்படித் தெரிந்திருக்கப் போகிறது?

அன்புப் பாங்கி கோவிந்தம்மா ஆர்வம் மிகக் குரல்

கொடுத்து அலட்டினளே, அந்தப் பான்மையைத்தான்

அவள் எங்கே புரிந்து கொண்டிருக்கப் போகிருள்?

கண் முன் வாழ்க்கை நடக்கிறது !

ஆளுல் கண்ணுக்குப் பின்னே சம்பவங்கள் நடக் கின்றன !

வீட்டில் நுழைந்த பஞ்சவர்ணம், கைப்பதனமாக சுவர் மாடத்தைத் தடவிப் பார்த்து, தீக்குச்சியை எடுத்து, நிமிண்டிக் கொளுத்தினுள். பற்றி எரிந்தது தீ பற்றி எரிந்த வயிறு அதனுடன் மல்லுப் பிடித்தது. கை விளக்கை உரலில் வைத்துவிட்டு, உள்ளே இருந்த வண்ணமாக வெளியில் நோக்கிளுள். வானத்தில் அவளது கண்ணின் கறுமை இடம் பிடித்துக் கொண்ட தாகப் பட்டது அவளுக்கு. அதன் காரணமாகத்தான், தனக்குப் பழுதான பார்வை உண்டானதோ என்று அவள் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. ஆனல். அவள் மூளை, அவளது அந்த ஒரு முடிவை-புல முறை எண்ணி அழித்து, ஈர்ம் காய்ந்து, சிலும்பல் தட்டிப்போய்விட்ட அந்த ஒரு முடிவை மீண்டும் புத்துயிர் கொள்ளச் செய்தது. ஆமா, அதுதான் சாலக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/159&oldid=612064" இலிருந்து மீள்விக்கப்பட்டது