பக்கம்:மருதாணி நகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 58 மருதாணி நகம்

இனிமெ எனக்கு இந்த ஆவணத்தாங்கோட்டை மண்ணு சரிப்படாது. ஆத்தா அப்பனைப் பறிகொடுத்துப்பிட்ட இடுசாமத்தைத் தந்த இந்தப் பட்டிக்காட்டு மண்ணுக்கு எங் களுவையும் நேசத்தையும் பலி குடுக்க ஒப்பவே மாட்டேன்! எம்புட்டு வாழ்க்கை விடியாமத் தப்பிளுலும், பொழுது பளார்னு விடியாமத்தப்புமா? இல்லே, பொழுது விடியப்புடாதின்னு சாபம் குடுக்க நான் என்ன அனுசூயாத் தெய்வமா, என்ன? ஊம், விடிஞ்சடியும் என்னைச் சந்தியிலே இழுக்கிறதுக்கு அந்த முத்தையன் மச்சான்காரரு பஞ்சாயம் வைக்காம மூச்சுவிட மாட்டாக: ஆனபடியாலே, வெள்ளி முனைக்கிறதுக்குள்ளாவே, நானு இங்கணேயிருந்து பறிஞ்சு, மூக்குடி மச்சானைத் தேடி சதமின்னு புறப்பட்டுப்பிட வேணும். இந்த ஒரு பாதைதான் எனக்கு ராக்காச்சித் தாயி காட்டுற பாதை யாத் தோணுது...பொட்டச்சி எம் மனசிலே மூக்குடி மச்சான் இம்மா நாளைக்கும் மூச்சுக்காட்டாம இருக்கிற துக்கு எது காரணமாளுக்கூடபரவாயில்லை. எம்மூஞ்சியை கண்டதும், அவுக மூஞ்சியிலே நல்ல சிரிப்பு மூண்டுப் பிடும். அது போதும் எனக்கு! இம்புட்டுக் காலமும் நான் பட்ட பாட்டுக்கு விடிமோச்சம் கிட்டிப்புடும் மானக் காட்டி மான லாந்திப் புடிக்கிறதுக்குக் கங்கணம் கட்டி யிருக்கிற முத்தையன் ஆம்புளையோட் ஆசையிலே மண்ணு விழுந்திடப் போவுது! அல்லாம், விடிஞ்சதும் அவருக்கு மட்டுப்பட்டுப் போயிடும்...ஊம்!

வளையற்காரக் கிழவர் கூறிய அத்தத் தங்கத்தாலிச் சரட்டின் விருத்தாந்தத்தை நினை ஆட் டி ப் பார்க்க அவளுக்கு ஞாபகம் உண்டாகவில்லை. அதேபோல, சாண் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த பசியைப் பற்றியும் அவளுக்கு நினைக்கும் நோக்கம் எழக்காளுேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/160&oldid=612065" இலிருந்து மீள்விக்கப்பட்டது