பக்கம்:மருதாணி நகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 167

மண்டிய, வளப்பம் கொழித்த நெஞ்சத்திடை கோலப்ப னின் நடுங்கிய கைகளை முட்டு'க்கொடுத்து அணைத்துக்

கொண்டாள்.

"இந்தாப் பாருங்கங்கிறேன்! நான் ஒங்களுக்குத் துணைக்கு வந்ததுக்குப் பொறகாலே, இனிமே இந்த மரக் குச்சி எதுக்குங்க?" என்று சொல்லி, ஊன்றுகோலை வீசி விட்டு, கோலப்பனை நெஞ்சோடு நெஞ்சாக இறுகத் தழுவிக்கொண்டு, புத்துலகம் காணப் புறப்பட்டாள் பஞ்சவர்ணம். மேனியை அணைந்த தீப் புண்களின் உபாதை அவளை இனி ஒன்றும் செய்துவிட முடியாது!

பகல் செய்வோனின் கதிர் முத்தங்கள் மண்ணுக்குப் பரிசில்களாக அமைந்த விந்தையினை அதிருஷ்டம் என்பதா? அன்பு என்பதா? தியாகம் என்பதா?...இல்லை, கடம்ை என்பதா?...

[ಾಹ್ರ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/169&oldid=612074" இலிருந்து மீள்விக்கப்பட்டது