பக்கம்:மருதாணி நகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? 66 மருதாணி நகம்

எனக்குக் கோடிப்பணம் கொட்டிக் குடுத்தாப்பிலே அம்மாம் குதுகலமாயிருக்குது. ஆத்தா மூத்தவ எப்படி யெல்லாமோ கூத்துக் காட்டுரு. ஆயி கூத்தைப் புரிஞ்சுக் கிடுறதுக்குக்கூட நம்மளுக்கு வயசு காணுது ... அழுத தெல்லாம் போதுமுங்க... சிரியுங்க மச்சான்!...”

அவனைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு அடி ஒற்றி, வழி ஒற்றி நடந்தாள் பஞ்சவர்ணம். சுருக்குப் பாதை மடங்கியது.

ராக்காச்சி அம்மன் சந்நிதி வந்தது.

கோலப்பனை கோயில் முகப்பில் வைத்துவிட்டு, அவள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தாள். " ஆத்தா, தாயே!” என்று தேம்பினுள். பிறகு, அடி மடியில் இருந்த மஞ்சள் தாலிக்கயிற்றை நீட்டி, தன் கழுத்தையும் கோலப்பனிடம் நீட்டினுள்.

பஞ்சவர்ணம் இப் பொழுது கோலப்பனுடைய சொத்து !...

இருவரும் சாமி கும்பிட்டார்கள். விண்ணில் பறந்த கருடனும் தரிசனம் ஈந்தது.

"மூத்தவளே! மேலைக்கு நாங்க ரெண்டு பேரும் மூக்குடியிலேருந்து கெளம்பி ஒஞ் சந்நதிக்கு வந்து, பள்ளயம் படைச்சுக் கும்பிடுருேம். எங்களை எப்பவும் கட்டிக் காத்துக்கிட வேண்டியது உம் பொறுப்பாக்கும். ஒன்னைத்தவிர எங்களுக்கு வேறே நாதி ஏது தாயே!”

“மச்சான்” என்று பாசம் பொங்க, நேசம் பொங்க

அழைத்தாள். பிறகு, தன்னுடைய தூய்மையான, எழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/168&oldid=612073" இலிருந்து மீள்விக்கப்பட்டது