பக்கம்:மருதாணி நகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மருதாணி நகம்

அதுக்கும் அப்பாலே...அப்பாலே... ஊருக்கு ஒசந்தவங் கன்னு தம்பட்டம் அடிச்சுக்கிட்டுத் திரிகிற அந்தச் சுருட்டை முடிக்காரன், அந்தக் கோணவகிடுக் குள்ளன், வீரப்பன், கோவிந்தன் அல்லார் விரோதத்துக்கும் ஆளாகத்தான் போறேன்; எம்பிட்டு நெஞ்சிலேயும் இநனப்பிலேயும் நிலச்சு நிக்கிற இந்தப் புது மச்சான் நல்ல ஆம்பளையா இருந்திட்டாக்க, மத்தப்படி எந்தத் தீவினை என்னைச் சோ தி ச் சா க் கூ ட, குத்தமில்லை...ஆன.இந்த மச்சான் நல்ல ஆளாவே இருந்திடச் செய்யப்புடாதா, ஆத்தா? வளையல்கார ஐயா சொன்னதுக்கு நேர் எந்த ஒரு இடுசாமமும் நேராம இருக்கவேணுமே, சாமி!...”

புரண்ட எண்ணங்களிலே இதயம் புரள, உருண்ட நினைவுகளிலே ஊன் உருள, உயர்ந்த உள்ளத்துடன் தானும் உயர்ந்து, வளர்ந்த கனவில் தானும் வளர்ந்து, வாழ்ந்த நேசத்திற்கு வாழ்த்துக்கூறிய நிலையுடன் அவள் நடைபயின்று நின்ற நேரத்தில், அவளுக்குரிய தேநீர்க்கடை அவளது பாதச் சுழியில் இலக்குக் குறித்தது.

இரணியவேளை நெருக்கத்தில் இருந்தது.

அசந்து உறங்கிக் கொண்டிருந்த கோலப்பன்

அசைந்து கொடுத்தான். குறட்டை ஒலி அருட்டியது. அவனை துணி விரல் தொட்டு எழுப்பினுள் அவள். அவள் தன்னையும் அறியாமல் சோற்றுக்கை விரல்களை 'நட்டுவக்காளி தீண்டிற்ைபோல உதறிள்ை. உள்ளம் தீண்டியவனைத் தொட்ட் உணர்வு தொட்டுக் காட்டிய குளிர் நடுக்கமோ, என்னவோ?...

கோலப்பன் தீயை மிதித்தவனைப் போன்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/52&oldid=611957" இலிருந்து மீள்விக்கப்பட்டது