பக்கம்:மருதாணி நகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மனக் கங்கு

பஞ்சவர்ணம், மணியக்காரர் வீட்டை விட்டு விரைவு பாய்ச்சி வெளியேறியபோது, காதளவு ஓடியிருந்த கயல் விழிகள் நீர் பாய்ச்சின. நெற்றியைக் கேசச்சுருள் மறைத்ததுபோன்று, நினைவைக் கோலப்பன் காட்டிய சரடு மறைத்தது. வழித் தடத்தை விலக்கிக் கிடந்த சாம்பான் குட்டையைப் போல, நெஞ்சுத் தடத்தி னின்றும் விலகிக் கிடக்கவில்லை அந்தப் புது மனிதனின் நினைவு முகம். பூவத்தக்குடி ஒற்றையடிப்பாதை, காளி யம்மன் காவுத் திடல், வியாழச் சந்தை, காயாம்பூ தேவர் தென்னந் தோப்பு, செட்டியார் பெட்டிக்கடை முதலிய ஊர்ப்பகுதிகளைக் கடந்து நடந்தாள் அவள். பேதைமைப் பண்பின் உணர்ச்சிச் சுழிப்பில் அப்போது அவள் மனம் கட்டுண்டிருந்ததால், நயனங்கள் மூச்சுக்கு மூச்சு கலங்கிக்கொண்டு வந்தன; நெஞ்சு முட்டி வெடித்துக் கொண்டு வந்த நெடுமூச்சு, கட்டுவிடாமல் விம்மிப் புடைத்த மார்பகத்தை எம்பித் தணியச் செய்தது. 'ஏதுக்கு எம் மனசான மனசு இம்மாங்கொத்த வகையிலே மாயம் புரியாமத் தவிக்குது? நான் செஞ்சது தப்பா? பாவம், அந்த ஆம்பளைக்கு ஒரு குந்தகம் வாரா தின்னுக்க, எனக்கு ஒப்பலே. அதாலேதான், மணியக்கார் ஐயாகிட்டவும் அப்பிடி நறுக்குத் தெறிச்சிதாட்டம் சங்கதியை ஒடைச்சு வச்சுப்புட்டேன். புண் ண ப் போத்திப் போத்தியா மூடஏலும்? ம்...எனக்கு வாக்குக் குடுத்தாப்பிலே, வார கிழமை தேரோட்டம் கழிஞ்ச கையோட, ஊர்ப் பஞ்சாயத்து கூட்டத்தான் போருங்க. அப்பாலே நியாயமும் கெடைக்கத்தான் போவுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/51&oldid=611956" இலிருந்து மீள்விக்கப்பட்டது