பக்கம்:மருதாணி நகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மருதாணி நகம்

அலைகிற தீவினைகளை விரல் மடக்கி எண்ணிப்பிட வாய்க்காது. எல்லாத்துக்கும் காரணம் நானேதான் என்கிறதை நான் எப்பவும் மறைக்கவோ, மறக்கவோ முனைஞ்சது கெடையாது. அது கணக்கிலே, இப்பைக்கு உண்டாகி யிருக்கிற என்னுேட இந்த நெலைமைக்கு நீங்களும் ஒரு வகையிலே மூலவேர் பாய்ச்சி நிக்கிறீங்க என்கிறதை நீங்க இனிமேயும் நெனச்சுப் பார்க்காம இருந்தாக்க, பொண்ணுப் பொறந்த நானு நடுச்சாமம் க்ண்டு நாக்கைப் புடுங்கிச் செத்து மடிய வேண்டியது தான்!...” .

பனிப்படலத்திற்குள் சிரித்தாடும் ரோஜாப்பூக்கள், காலை இளம் பரிதிக்கு முன்னே அசைந்தாடும் மெல்லிய பூங்காற்றைக் கண்டு பனி முத்துக்களை உதிர்த்துச் சிலிர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித்தான் பஞ்ச்வர்ணம் நீருகுத்தாள் : கண்ணிர் உதிர்த்தாள்.

அவள் வடித்த கண்ணிரின் கரையிலே அவன் ஒளித்த கறை கரைந்ததா ?-அவன் தவறு இழைத்தவன் மாதிரி, ஒரு கணம் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டான்; கைகளைப் பிசைந்தான். குறுக்கும் மறுக்கும் காலடி பாவி நடந்தான். பிறகு, நீர் கொழித்த தன்முகத்தை அவள் அருகில் நகர்த்திக்கொண்டு கூறினன் :

  • இந்தாப்பாரு, ஒன்னைத்தான். மொதலிலே எனக்கு என்ன புரியிதுன்னு, நீ என்னைச் சுத்தமா நம்பலேங் கிறது புரியுது ; நெஞ்சை ஒளிச்சு வஞ்சகமில்லேன்னு ஒரு பேச்சு ஊடாடும் நம்ம நாட்டுப் பக்கத்திலே. அதொப்ப, நான் ஓங்கிட்ட எந்த ஒரு ரகசியத்தையும் பொத்தி மூடல்லே. ஆளு, ஒம் மனசான மனசை கவ்வல் கம்பாலே மாட்டை நெருக்கி விரட்டிருப்பிலே, யாரோ
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/54&oldid=611959" இலிருந்து மீள்விக்கப்பட்டது