பக்கம்:மருதாணி நகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி இகம் 53

வெரட்டி வேடிக்கை பார்க்கிருங்க. அப்பவே சொல்லோ ணும்னு ரோசிச்சேன். எனக்கு ஒரு சம்சயம் தட்டுது : இதுவேதான் ஒம் மனசுக்கும் சம்சயம் தட்டிக் காட்டி யிருக்கவேணும். நான் ஒங்கிட்ட காட்டின தங்கத் தாலிச் சரட்டிலே சூது ஒண்ணும் கண்ணுமூச்சி காட்டலே நான் ஒன்னுேட மனசுக்குள்ளே ஒளிஞ்சு விளையாடறதுக்குப் பாதுகாவல் இருக்க வேணுமிங்கிறதுக்காகத்தரன் இதை ஒனக்கின்னு செஞ்சுகொண்டாந்தேன். பூ ட க ம | ச் சொல்லி ஒனக்கு விளையாட்டுக் காட்ட ஆசைப்பட்டேன்; அதுக்குள்ள, எம்பிட்டு வேடிக்கை என்னையே ஆட்டிப் படைச்சிடும்போலயிருக்குதே ? ...”

மூக்குடியில் தனக்கிருந்த குடிக்காணியாட்சிப் பாத் யதை பூண்ட நானூறு குழி நஞ்சை, நாலு தாக்கு புஞ்சைத் திடல், ஏழெட்டு புளியமரங்கள்-இவைபற்றி யும் கூறினன். கைவசம் இருந்த காசு பணத்தைக் குறித்தும் சொன்னன். போதாதா?...

கோலப்பன், கழுத்தைச் சுற்றிக்கிடந்த துவாலையை எடுத்து முகத்தைத் துடைத்தான். சிவப்புப் படர்ந்திருந்த விழிகளைக்கொண்டு, அந்தப் பட்டிக்காட்டுப் பாவையைப் பதுமையாக்கிப் பார்த்தான். பதுமையைப் பார்த்தவன், பதுமையாகிப் போனன். மைத் தடங்கண்களில் தத்த எளித்த சுடுவெள்ளம்தான் அவனை அவ்வாறு தத்தளிக்கச் செய்திருக்கவேண்டும்!...

"இந்தாங்க !...

"சொல்லுவேன் ...!"

'நீங்க இப்ப சொன்னது ஒட்டுக்கும் ஒட்டை ஒடை சல் இல்லாத சங்கதிதானுங்களே?" -

"ஆத்தா ஆணையான தாக்கல்தான்...!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/55&oldid=611960" இலிருந்து மீள்விக்கப்பட்டது