பக்கம்:மருதாணி நகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. மருதாணி நகம்

ஆண' வைத்துப் பதிலிறுத்த அவன் வாய்மொழி தேய்வதற்குள், அங்கு ஓர் ஆள் வந்தான். அவன் முத் தையன் வீட்டுப் பண்ணையாள் அவனைக் கண்டதும்,கால் கள் பின்ன, வாசலுக்கு ஓடி வந்தாள் அவள். “ என்ன காத்தா?” என்ருள்.

"எங்க மொதலாளித் தம்பி ஓங்கிட்ட வச்சுக்கிட்டி ருந்த நேசத்துக்கு ஒப்புதலேயாட்டம் குடுத்து வச்சிருந்த கொரநாட்டுக் கண்டாங்கிச் சீலை, காஞ்சீவரம் பட்டு ரவிக்கைத் துண்டு, புட்டாமாவு தகரம் அது இது எல் லாத்தையும் இப்பவே கையோட வாங் கி யா ர ச் சொன்னிச்சு!” என்று விளக்கிளுன் அவன். வாசல்தான் நிலைப்பு !

தன் முதுகுப் புறத்தே மூச்சுக் காற்று பட்டு விலகு

வதை உணர்ந்த அவள், பின்பக்கம் அலட்சியமாகப் பார்த்தபடி, காத்தானை நோக்கி, "நீ ஒப்பிக்கிற சாமான் சட்டு எதொண்ணும் என் வசம் இல்லேன்னு போய்ச் சொல்லிப்பிடு ' என்று முடிவு சொன்னுள்.

"மெய்யாலுமா தங்கச்சி ?”

"ஐயோ, பாவம் !... பொய்யோடவே சதா அல்லுப் பகல் அறுவது நாழியும் பழகிறதாலே ஒனக்கு நெசம்பொய்யைக்கூட இனம் கண்டுக்கிட ஓடலேபோலே. தங்கச்சி-அக்கா சொந்தம் கொண்டாடுறத்துக்குத் அப் பாலே வா. வாய்க்கு உணக்கை வாரமாதிரி சுக்குக் காப்பியை திறமாப் போட்டு கொட்டாச்சியிலே தாரேன். இப்ப நீ எனக்கு அந்நியம் அசலாட்டம்...! ஒடிப்பிடு!...” என்று விரட்டினுள். - .

குதிரில் தீ வைத்து, தீப்பொறிகளில் வாணப் பொறிகள் வண்ணம் பெற்று வானம் உயர எழும்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/56&oldid=611961" இலிருந்து மீள்விக்கப்பட்டது