பக்கம்:மருதாணி நகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 55

போது, அந்தமாய்த்தான் இருக்கும். ஆனால், குதிர்ப் பொறி ஒன்று மேனியில் பட்டாலல்லவா அதன் உண்மை உள்ளம் புலன் தெளிய முடியும்? ஆத்தாடி!... பூச் சாண்டிப் பயம் காட்டுதே புள்ளே ? என்ற எண்ணத்தை முறுக்கி வீசிவிட்டு, :ఫైsు கதி என்று ஓட்டம் பிடித் தான் காத்தான். ஊர் கர்க்கும் பத்திரகாளியின் உச்சா டனம் பெற்ற முகத்தைக் கண்ட பாவனையில், அவன் ஓடலி னுன் !

பஞ்சவர்ணம் நெஞ்சில் திமிர்கொழிக்க, நேர்வண் னப் பார்வையில் நேர்மை செழிக்க, பாளைவெடித்த பக்குவமாய்ச் சிரித்தாள். அவள் தொங்கல் தொடுசு இல்லாமல் சிரித்த சிரிப்பின் லாவண்யத்தைப் பார்த்துப் பரவசமடைந்தான் அவன். ஆளுல் அதே பரவசம்: கண்மூடிக் கண் திறப்பதற்குள், இருந்த இடம் தெரியா மல் மறைந்தது. இது என்ன புத்தம் புதுசான தில்லு முல்லுப் போக்கு சுத்த போக்கணங்கெட்ட நடத்தையா யிருக்குதே ? ...”

தொண்டைக்குழியை வேலி கட்டி, ஆயிரம் பதின யிரம் எண்ணங்கள் கூத்தாடலாம். ஆனல், இதழ்சேர்ந்து இதழ்விலக்கி அவற்றின் உண்மை அறிந்து, உள்ளம் தெரிந்து எடைபோட்டு முடிவுகட்டிச் சொல்வதில்தானே அவரவர்களின் வல்லமை தெரிகிறது ?

கோலப்பனுக்கு வாய் ஊறியது. அவளை எதிர்க் கேள்வி கேட்டால்தான் நல்ல மூச்சுக் கிளம்பும் என்று ஒரு துடிப்பு. ஆளுல் துடிப்பு உண்டான அளவுக்கு, துணிச்சல் உண்டாகக் காளுேம் !

"சரி, போய்க் குந்துங்க. சோறு ஆக்குறேன். ஆக்கின குழம்பு வச்சு ஊத்துறேன். கைவேலை முடிஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/57&oldid=611962" இலிருந்து மீள்விக்கப்பட்டது