பக்கம்:மருதாணி நகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மருதாணி நகம்

சடியும், இட்டிலி லாவாரத்துக்கு மாவு வேறே ஆட்ட வேணும். நான் உள்ளே போவட்டுமா?"

அவள் கேட்டுக் கொண்டிருக்கையில், கருக்கரிவாள் மீசை வைத்துக்கொண்டு முரடன் ஒருவன் வந்தான். "இந்தாலே, எங்க தேவர் ஐயா மச்சினப்புள்ளை ஒனக்கு அறந்தாங்கிச் சந்தையிலே வாங்கித் தந்த தங்க மோதிரத்தை கைக்கு மெய்யா வாங்கிட்டுப் பறிஞ்சாரச் சொல்லி உத்தரவு போட்டிருக்குது. ஒன் வாயிலே சீதேவி இல்லையாம். இந்தத் துப்பு ஊரு முச்சூடும் தமுக்கு கொட்டினப்பிலே, பரவிப் பூடுச்சாம். ம்!” என எடுத்த எடுப்பிலேயே புட்டுப் புட்டு வைத்துப் பேசினுன்

அவன்.

பஞ்சவர்ணத்தின் உறவு முறை க் கா ர னு ன வீரப்பனின் குடும்பத்தைச் சார்ந்த அந்தத் தடியனை எரித்துவிட முயன்ருளா அவள்? இல்லை. பாவம்' என்று

'மாப்பு விட்டாளோ?”

"இந்தாப் பார்த்துக்கிடு. அந்த ஆம்பளையை இங்காலே ஒரு கடுத்தம் வந்திட்டுப் போவச் சொல்லு! மற்றத் தாக்கல் தகவலெல்லாத்தையும், நம்ம மணியக்கார ஐயா பஞ்சாயத்துக்குப் பின்னடிதான் பேச வாய்க்குமா மின்னு நான் செப்பினதாய் அவுக காதிலே போடு ம்... ஒடு!...”

அந்தி சாய்ந்தது. இரவின் நெடுங் கதவுகள் திறக்கப்பட்டன. கறுப்புப் பூச்சில் வெள்ளைப் புள்ளிகள் நெளிவு காட்டின.

வாய்ச் சவடால்காரனுக்குக் கசைய்டி கொடுத்தும் அவன் போகும் வழியாகத் தெரியவில்லை. ஆனபடியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/58&oldid=611963" இலிருந்து மீள்விக்கப்பட்டது