பக்கம்:மருதாணி நகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 57

வெளிப்புறத் தட்டியை இழுத்து மூடி, கம்பியை மூங்கில் சிம்பில் சேர்த்துக் கட்டிவிட்டு, வந்தவனை வெளியே நிறுத்தியபடி, அவள் உள்ளே போளுள். அப்போது அவளது உள்ளத்தைவிட்டு வெளியே புறப்பட்டுப் பெரு மூச்சுப் பறித்த கோலப்பன் பனைத்துரனுடன் அணைவு கொடுத்து நின்ருன் "பஞ்சவர்ணம், நான் ஒம்மேலே வச்சிருக்கிற கொள்ளை ஆசைக்கு என்னென்னமோ குந்தகமெல்லாம் கை வரிசை காட்டுதே ? ...” என்று வேதனை காட்டப் பேசினன் அவன்.

அவனுடைய மனம் எனும் கங்கு உண்டாக்கிக் காட்டிய சூட்டிலே, அவனது மனக் கனவின் நாளங்கள் பொசுங்கிச் சாம்பலாக, துடித்துக்கொண்டிருந்தன!

"இந்தாப் பாருங்க. இனி நீங்கதான் எம் மச்சான் ! எம்புட்டு இந்த முடிவை மாத்திறத்துக்கு கொம்பு முளைச் சவன் மானத்திலேருந்து குதிச்சாக்கூட முடியாதாக்கும்! நான் சொல்லுறதை வாங்கிக்கிடுங்க. கன்னி கழியாப் பொண்ணு நானு, முன்னைப் பின்னத் தெரியாத ஓங்க வாய்ச்சொல்லை நம்பி, ஒங்களுக்கு அடைக்கலம் தந்து, ஒங்களுக்காவ என்னையே காவு குடுக்கத் துணிகாரம் கொண்ட என் பேச்சை நம்பப்புடாதா? நான் புதுப் பொண்ணு. இதுபத்தி ரவைகூட ஐயப்படாதீங்க!” என்று மன்ருடினுள் பஞ்சவர்ணம். க ண் ணி ரு ம் அவளுடன் மன்ருடியது.

அப்போது, "பஞ்ச வர் ண ம்!” என்று குரல் கொடுத்தபடி வந்த வளையற்காரக் கிழவர் வாசற்புறத் தட்டிக் கதவை அவிழ்த்துக்கொண்டிருந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/59&oldid=611964" இலிருந்து மீள்விக்கப்பட்டது