பக்கம்:மருதாணி நகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" எனக்குச் சதம் நீங்க!"

எள்ளினுள்ளே ஐக்கியப் பட்டுப் பொதிந்து இருக் கும் எண்ணெய்ச் சத்தியைப் போன்று, இயற்கையின் நியதிப் பண்பாட்டில் இரண்டறக் கலந்து நிலவும் இறைமைச் சக்தியின் அலகிலா விளையாட்டுக்களை எடை கட்டி எடை போட்டுக் கணிக்க நாம் யார் ?

நாளை விடிந்தால், ஆத்தாளுக்குத் தேரோட்டம். ஆவணத்தாங்கோட்டை விழாக்கோலம் பூண்டு, கோல நகை சிதறிக் காட்சியளிக்கும் அந்தத்திற்கு ஈடு எடுப்பு கிடையவே கிடையாது !

உலகாளும் மாதாவின் அதிசயச் சக்தியின் பெருமை களே உள் அழுந்திய பாவனையில் எண்ணி, வியந்த நிலையில், ஒரு நாழிகைப் பொழுது, விரல் வழி வழிந்த கொம்புத் தேனைப் போல நழுவி ஒடியதை உணர அவளுக்கு நெடு நேரம் பிடித்தது. பிடித்து வைத்த மண் பாவையாளுள் அவள்.

வள் : பஞ்சவர்ணம் ! ஞ ویه

முகம் கழுவி, மாடத்தில் கொட்டுக்கடையில்’ இருந்த விபூதி - குங்குமத்தை அள்ளி நெற்றியில் தீற்றிக் கொண்டாள் அவள். பொண்ணுப் பொறந்த தாய் நீ. நான் உங், குஞ்சு. என்ைேட நிலவரத்தைக் கூட்டு மொத்தமாப்புரிஞ்சவ நீ. என் மனசைத் தெளியவச்சு, என்ைேட மன்சான மனசைக் கட்டிக்காக்கவேண்டியது

ஒங்கடமையாச்சுதே, ஆத்தா எம்பிட்டு மானம் மரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/60&oldid=611965" இலிருந்து மீள்விக்கப்பட்டது