பக்கம்:மருதாணி நகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 59

தையை நல்ல தனத்தோட வாழவைக்கவேண்டியதும் உம் பொறுப்பாச்சே தாயி ? கனிஞ்ச மாம்பழம் கல்லடி பட்டா, தரையிலே சாயும். ஆளு, எம் பேதை நெஞ்சைக் குறிவச்சு சுக்கான் கல்லாலே வீசி அடிக்கிருனுங்களே போகுடிப்பசங்க சிலபேரு என்னுலே இப்படியாக்கொத்த தீவினைகளையெல்லாம் எப்படித்தான் தாள ஏலும்? நீ மனசு கொண்ட புண்ணியவதி ! ஆனதாலே, எனக்கு ஒரு நல்ல பாதையைச் சுட்டிச் சொல்லு. அப்பாலேதான் ஊருப் பஞ்சாயத்திலே எனக்கு ஒரு நல்ல கியாதி உண் டாகும்! அதுக்குப் பின்னுடிதானுக்கும், நான் அந்த நேச மச்சானை மனசொப்பிக் கட்டிக்கிடவும் வாய்க்கும் ! அப்ப தான், பணத்தைத் தலையிலே வச்சுக்கினு கூத்தாடுகிற இந்த ஆவணத்தாங் கோட்டைக் குடிசனங்களுக்கு இந்தப் பஞ்சவருணம் குட்டியோட குணத்து மணமும் அத்துபடியாகும்! ... ஆமா... ஆமா!...”

அகல் விளக்கு சுற்றிச் சூழ்ந்து அம்பாரம் கட்டிக் கொண்டிருந்த இருட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

இராச் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. 'கும்பளான் கருவாடு மணத்தது. ஆக்கின குழம்பு உணக்கையாக இருந்தது. ஆவணம் குண்டு சட்டியில் ஊறிய அகப்பையும், குறிஞ்சிப்பாடி வாணக்கச்சட்டி'யில் நெளிந்த கரண்டியும் மிகவும் சுறு சுறுப்புடன் அலுவல் பார்த்துக் கொண்டிருந்தன.

கோலப்பன் ஆவ்'...' என்று ஏப்பம் பறித்தான்! வளையல்காரக் கிழவர் ஒரு பிடி இறக்கமாகத்தான் சாப்பிட்டிருக்கவேண்டும். அவர் விட்ட ஏப்பம் சுருதியில் சற்று இறங்கியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/61&oldid=611966" இலிருந்து மீள்விக்கப்பட்டது