பக்கம்:மருதாணி நகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மருதாணி நகம்

வெற்றிலைக் குட்டான் காலியாகிக் கொண்டிருந்தது. குடிசையின் பனை ஓலை இடைவெளி வழியே விண்ணின் தண்ஒளி கள்ளம் பாய்ச்சி, கருணை பாய்ச்சிச் சிந்தி வழிந்தது.

பஞ்சவர்ணம் சிந்தனையின் வசப்பட்டுப் போனவ ளாக, பனைமரத் துணுக்குத் துணையாளுள். தனக்குத் துணைவந்த தொல்லைகளை ஒரு விதமாக எல்லை கடத்தி விட்டு, தீவிரமான ஒரு முடிவுக்கு உடந்தைப் பட்டு நின்ருள். அவர்கள் இருவரும் மாறி மாறி, மாற்றி மாற்றி, அவளைச் சாப்பிடும்படி வேண்டியதன் பேரில், 'அஞ்சாறு பருக்கைகளை வயிற்றினுள்ளே செலுத்தி வைத்தாள். உண்டது ஒட்டவில்லை. எப்படியோ, ஏப்பம் புறப்பட்டது. நெஞ்சத்துக்கவலைகள் மன உயிரின் சக்தித் துளிகளை உண்டதனுல் விளைந்தஏப்பமோ என்னவோ?...

ஊராளும் தெ ய் வ த் தி ற்கு அன்று தினம் "ஊர்த்துவக்காளி' யின் புனைவடிவம். மேலக் கட்சி ச.மு. செல்லப்ப சேர்வை உபயம். எல்லாம் தடபுடல்தான். கால்தூக்கி ஆட முனைந்த மூத்தவளின் போக்கிற்கு ஒரு வழியைக் காட்டி, அந்த வழியில் கண்கள் திறக்கப் பெற்று ஆடிமுடித்த அற்புதப் பெருங்கதைக்கு விளக்கம் சொல்லவல்ல தெய்வத் திருவிழாவாயிற்றே! கொட்டு முழக்கு, தாரை தம்பட்டம், சங்கம், சாரங்கம் எல்லாம் முழங்கிக் கொண்டிருந்தன. நெஞ்சில் வாழ்பவளே நினைவில் வாழ்த்தியபடி, கூப்பிடு தொலைவினின்றும் ஒலி பரப்பியூவாறிருந்த நாத இசைப்பாட்டின் பண்பாட்டில் மனம் நெகிழ்ந்து போய்க் காணப்பட்ட பஞ்சவர்ணம், தலையை பலி ஆட்டுக்கிடாவை யொப்ப சிலிர்த்த விண்ணம், ஒரு தப்படி நடந்துபோய், கிழவரின் பக்கம் நின்று, "ஐயாவே, கொஞ்சப்பொழுதுக்கு இங்கிட்டாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/62&oldid=611967" இலிருந்து மீள்விக்கப்பட்டது