பக்கம்:மருதாணி நகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மருதாணி நகம்

அவள் மனமும் கொதித்தது. கொதித்த நீரில் வெஞ்சினம் கரைந்தது; இரக்கம் தேங்கியது. ஐய்ய, பாவம்' என்று தன்னுள்-தனக்குத்தானே அனுதாபப் பட்டுக் கொண்டதுடன் நிற்காமல், முத்தையனின் உருவை ஒரு தரம் உள்ளக்கிழியில் எழுதிப் பார்த்துக் கொண்டு, உருவத்தின் உரிமைக்குரல் ஓங்கி நிற்கும் அந்தச் சீமைஒட்டு வீட்டைக் குறிவைத்து நடந்தாள்; ஒடிஞள்!

அவளுடன் கூட அந்த நினைப்பும் ஓடியது, அந்த நினைப்பில் முத்தையனின் நினைவுமுகம் தெரிந்தது.

சித்திரை நிலவில், வசந்தத் தென்றலில், அழகு மணிச் சிரிப்பில், எழில் மண்டிய மாணிக்கப் பார்வையில் தன் விளையாட்டுத் தோழனுக வாய்த்த முத்தையனை நினைத்துப் பார்த்தாள். கூட்டாஞ் சோறு பொங்கிச் சாப்பிட்ட நாள் ஒன்ரு, இரண்டா? தேர்த் திருநாளில் கட்டுஞ் சோற்றைப் பகிர்ந்து உண்ட நடப்புக்கள் ஒன்ரு, இரண்டா?... களத்துமேட்டில் கஞ்சிக் கலயம் சுமந்து சென்று பசி தீர்ந்த சம்பவங்கள் ஒன்ரு இரண்டா? "இப்படிப்பட்ட வகையிலே மனசு தண்டனிட்டுக் கிடந்த என்னைக் கடோசீலே ஏமாத்திப்புட நெனச்சிருச்சே அது?... இம்மாந்தொலைவு கெட்ட நடத்தையுள்ள ஆம்பளையானபடியாலேதான், அன்னைக்கு ஒரு கடுத்தம் நேரங்கெட்ட நேரத்திலே என்னைத் தேடிக்கிணு வந்து, கெட்ட நோக்கத்திலே குந்திக்கிட்டிருந்திச்சுப் போலே! ம். நல்ல பாடம் கத்துக் குடுத்துப் புட்டேனுக்கும்!...”

ஓடினவள் நின்ருள். மறு க ண ம், அவளுள் இரக்க சிந்தை விழிப்புக்கொண்டது. அது என்னதான் கெட்டதாவே இருக்கட்டும். அதுக்காவ, அதோட அந்திம காலத்திலே அது மூஞ்சியையாச்சும் ஒரு திருப்பம்காணும இருக்கலாமா?...கூடாது!...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/80&oldid=611985" இலிருந்து மீள்விக்கப்பட்டது