பக்கம்:மருதாணி நகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 77

எம்மாம் பெரிய இடுசாமமெல்லாம் தடம்காட்டியிருச்சுது உசிர் உள்ளமட்டுக்கும் ஒடம்பு கொள்ளாத கிலேசம் ... என்ன செய்யட்டும்?

ஆற்ருமையின் நுண் உணர்வு பெருமூச்சாக வெடித் தது. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் ஒட்டாது அல்லவா ? அதுமாதிரி, அவளுள் எழுந்த எண்ணங்கள் நிறபேதம் காட்டி, ஒன்றுடன் ஒன்று உறவு செய்யாமல் விலகியே இருந்தன. எண்ணங்களும் நினைவுகளும் தறி சுழன்ற வேகத்தில், அவளுக்குத் தன்னுணர்வை உண் டாக்கியது, எதிரில் நின்றுகொண்டிருந்த ஐயனர் குதிரை. ஏதோ ஒரு நிகழ்ச்சியை அவள் சில கணங்கள் வரை மறந்திருந்தாள். அது இப்போது மனத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது துலாம்பரமாகப் புரிந்தது. சுற்றிச் சூழ நோக்கினுள். சாத்தன் குடியிருப்பு ‘சாவன்னு-முன’ வைத் தவிர, சொச்சப் பேர்கள் எல்லோரும் பறிந்து விட்டிருந்தார்கள். வெறுமை வெளியில் நிரந்து பரவிக் கிடந்த உண்மையின் தாத்பர்யத்தைப் பஞ்சவர்ணம் உணரலாளுள்; அக்கணத்தில், முத்தையன் கிணற்றிலே விழுந்து சாகப் பிழைக்கக் கிடப்பதாகச் சேதி சொன்ன நடப்பையும் தெளிந்தாள்.

இதயத்திற்கு மாற்று உரைத்துக்காட்டும் உரை கல்லாக அமையவல்லவை விழிகள். பேசாத நெஞ்சிற்கு பேசவல்ல ஓர் ஒலிக்கலவையாக அமைந்து பேசும் சக்தியைக்கொண்டு விளங்குகிறது, இந்தக் கண்கள். நயனங்களில் சுழி த் தோ டும் நீர்க்கலப்பில்தான் உள்ளத்தின் கரையும் தெரியமுடியும்,

பஞ்சவர்ணத்தின் உந்திக் கமலத்திலிருந்து ஓர் அதிர்ச்சி புறப்பட்டது. உலை கொதிப்படையும் அளவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/79&oldid=611984" இலிருந்து மீள்விக்கப்பட்டது