பக்கம்:மருதாணி நகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" உன்னைப் புரிஞ்சிக்கிட்டேன்!"

தீக்கணப்புக் குழிக்குள் தன்னை உடந்தையாக்கிக் கொள்ளும் இரும்புக்கழி,நெருப்புப் பொறிகளின் வெம்மை ஏற ஏற, அதன் போக்கிலே, நெளிந்து வளைந்து கொடுக் கும் இயல்பும் பக்குவப்படத் தலைப்படுவது இயல்பே யல்லவா ? அதைப் போலத்தான், பஞ்சவர்ணத்தின் குணநலனும் அமைந்திருந்தது. ஊருக்கு ஒப்ப ஒட்டிப் போகத்தான் வேணும். இதுதான் நாட்டு வழக்கம் ; இதுவேதாளுக்கும் தலைமுறை தத்துவமான பேச்சாகவும் இருந்து வருது. இப்பிடி யிருக்கிற காலத்துக்கு, பொண்ணுப் பொறந்தவ நான் ஒண்டி வெட்டி நின்னு, வெட்டிப் பேச்சுப் பேச வாய்க்குமா ?... நானும் ஊர்ச் சனங்களை யொத்து, அததுக்குத் தக்கனை அமைஞ்சிருந்து வாழ்ந்துக்கிட்டு வந்திருந்தாக்க, எனக்கும் மனசுக்கு வாகான தெம்பும், வசமான நம்பிக்கையும் அத்துபடியாகி வந்திருக்கும்...என்னமோ, ஒண்ணுக்கும் நான் குடுத்து வைக்கலை ஒண்ணும் கை கூடியும் வரல்லே!... இம்மாங் கொத்த நேரத்திலே, வானத்து நிலாவு மண்ணுக்குக் குதிச்சதாட்டம் கீழச்சீமை ஆசாமி...அதான் இந்த மச்சான் எங் கண்ணிலே பட்டுச்சு... இப்ப, மனசிலே படமாட்டம் பதிஞ்சிருச்சு. இதோட நேசமானும் எனக்கு ஆத்த மூத்தவ கிருபையாலே பலிதமடைஞ்சி, எனக்கும் ஒரு பிடிமானம் உண்டாக்கி, எம்பிட்டுமானமும் காப்பாத் தப்பட்டுப் பிடுமின்னு ரோசிச்சு, நெஞ்சிலே சந்தோசம் ஊறித் தெளிய நின்னுக்கிட்டிருக்கையிலே, பொட்டுப் பொழுதுக் குள்ளன்ற, பொட்டு விட்டுப் போனுப்பிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/78&oldid=611983" இலிருந்து மீள்விக்கப்பட்டது