பக்கம்:மருதாணி நகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மருதாணி நகம்

"புரியாம இல்லீங்க!”

"அவன் ஒம்புட்டு மானத்துக்கே உலை வச்சுப்பிட கங்கணம் கட்டி, தோளுத்துண்டிலே முடிஞ்சு வச்சுக் கிட்டிருக்கிற பரதைப்பயல் அவன்!”

"அத்தனையும் சுத்தமுங்க. நான் மறந்திடலே; மறந்திடவும் மாட்டேனுங்க !”

" பின்னே, நீ ஏ து க் கு இம்மாந்துாரம் அவதி அவதியா இப்பிடி ஓட்டம் பிடிக்கிறீயாம் ?”

"அதுங்க... வந்துங்க...”

' களவாணித்தனம் பண்ணுமச்சேதியைப் புட்டு வச்சுப்பிடு, பஞ்சவர்ணம் !"

“ என்ன சொன்னிங்க ? நானுங்க களவாணித்தனம் பண்ணுறேன்? இந்தமாதிரிப் பேச்சை இன்னுெரு தக்கம் எங்கிட்டே பேசாதீங்க. நான் இப்ப அந்த முத்தையன் ம ச் சா னை க் காணுறத்துக்குத்தான் போறேன்!”

藻酸 ஏனும் ջ»

"அந்த ஆம்பளை உசிருக்குப் போராட்டம் போட் டுக்கிட்டிருக்கிறதாலே, நானும் மனசு உள்ள பொம்பளை யிங்கிறதாலே, இப்பிடிப் பறியிறேனுங்க!”

"ஐய, பாவம்...!"

" நையாண்டியும் நைத்தியமும் பண்ணுறத்துக்கு இதுவா நேரம்?” அகல்விளக்கின் முத்துச் சுட்ராய்ப் பொலிவு காட்டினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/82&oldid=611987" இலிருந்து மீள்விக்கப்பட்டது