பக்கம்:மருதாணி நகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மருதாணி நகம்

“அவுக வீட்டுக் கொல்லைக் கேணியிலே விளுந்திருச் சாம்! ஊர்ப் பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருந்தப்ப, அது மட்டுந்தான் ஆத்தா சந்நிதானத்துக்குப் பக்கம் நாடலே. இதைப்பத்தி கசமுசன்னு ஊர்ப்பெரிய புள்ளிங்க காதைக் கடிச்சுக்கிட்டிருக்கையிலே, வ ள வி க் கா ர த் தாத்தா ஒடியாந்து இந்த விசயத்தை விளக்கிக் காட்டினுக! ஆளுக்க, அந்த ஆளான ஆளு ஏன்தான் இப்பிடிச் செஞ்சாருன்னுதான் விளங்கலே, கோவிந்தம்மா !”

சுள்ளாப்பு குறையாமல் எரித்த அனல், புழுக்கத்தை ஏற்படுத்தியது.

குவிந்த குவளை இதழ்கள் காற்றைக் குவித்தன.

" எனக்கு ஒண்னு தோணுது.”

"சொல்லு!”

"அவுகவூட்டுக்குப் போயிட்டுத் திரும்புவம். நீயும் கூட வருவீயா ?”

இருவரும் ஒட்டுத்திண்ணையை விட்டு எழுந்தார்கள். அப்பொழுது, ஈச்சந்தட்டி வழியே ஏதோ முகம் ஒன்று தெரிந்து மறைந்ததைக் கண்டாள் கோவிந்தம்மா. முக்காலும் கோலப்பன் மச்சாளுகத்தான் இருக்க வேணும். அந்தக் கண்ணு அப்படித்தான் இருந்திச்சு! இவ்விஷயத்தை அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்கிற தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தபோது, பஞ்சவர்ணம் கோவிந்தம்மாளின் இதழ்களைக் கட்டிவிட்டாள்!

அந்தச் சாயாக்கடை வாசலில் ஈயப்பூட்டு ஒன்று காட்சியளித்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/88&oldid=611993" இலிருந்து மீள்விக்கப்பட்டது