பக்கம்:மருதாணி நகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 87

அவர்கள் - கூட்டாளிப் பெண்கள் இருவரும் ஒரே கிளையில் குந்தியிருக்கும் பாசப்புருக்களுக்கு நேராக கைகோத்து நடந்தார்கள்.

அப்போது உச்சி வெய்யிலின் உக்கிரம் உடைபட்ட வேளை: உருமம் கடந்த காலம்.

கோவிந்தம்மா வாய் சும்மா இருக்காது. கருவேல மரத்துக் கோந்துப்பிசின் வைத்து ஒட்டினல் கூட ஒட்டாது. ஆளுள் அவள் மனம் இளகு பான்மையைப் பழகியிருந்தது. கண்டதும் க வர் ந் து விடுவாள்; கண்டதும் கவரப்பட்டு விடுவாள்! பின்னே என்னடி பூவாயி! இந்த மேலக்குடியிருப்பிலே நம்ம வயசொத்த குட்டிங்க எத்தனையோ வெள்ளக்காடான பேருங்க குறுந்திண்ணை முந்தலிலே குந்தியிருக்கையிலே, எனக்கு இந்தப் பஞ்ச வருணத்தை மட்டுக்கும் மனசுக்கு ஒப்பிப் போயிருச்சுதின்னு, எனக்கே அது அதிசயமாத்தான் இருக்குது. அதுக்கும் அப்பன் ஆயி இல்லை; நானும் அப்பிடித்தான். எனக்காச்சும் மேலு காலு வலிச்சாக்க இஞ்சித்தண்ணி வச்சுத்தர வாச்சும் பெரியத்தா ஒருத்தி படுகிடையாக் கெடக்கிரு. பாவம், இவளுக்குத்தான். யாரும் சதம் இல்லே. இப்ப மூக்குடியிலவோ, இல்லே எங் கணையோவோ இருந்து வந்து, பஞ்சவர்ணத்து மனசான மனசை, சொக்குப்பொடி தூவி மசக்கி வச்சுக்கிட்ட அந்த மச்சானுக்கும் இப்ப கிறுக்கு மூண்டுப்புடுச்சாமே? ஆமா. இந்த ஆளு. நெசமாவே வாய்க்கு மெய்யானவுகதான? இல்லே, புறக்குடிப் புள்ளிதான? என்னமோ, அக்கா நம்பியிருச்சு. அது மனசு வைரத்துக்குச் சமதையாக்கும்! வைரம் லேசுபாசிலே கைக்கு ஆப்படுமா? அதாட்டம் தான் எங்க பஞ்சவர்ணக்கிளியும்! என்று அவள் கீழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/89&oldid=611994" இலிருந்து மீள்விக்கப்பட்டது