பக்கம்:மருதாணி நகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மருதாணி நகம்

தொங்கல்வாரித் தேக்கத்திலிருந்து வடகரை ஊர்ப் பிள்ளையார் கோவில் குளம் வரை வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம்-அல்லது, வாய்ப்புக்களை உருவகப்படுத்தித் கொள்ளும் நேரமெல்லாம் பஞ்சவர்ணப் புராணம் படிக்கத் தப்பவே மாட்டாள். அவள் தப்பிப் பிறந்தவள்!

நாகுடிச் சாமியாடி வீட்டுத் திருப்பத்தில் பஞ்சவர்ண மும் கோவிந்தம்மாவும் திரும்பினர்கள். த டி யு ம் மீசையும் விபூதிப் பட்டையுமாகக் திகழ்ந்த சாமியாடியை ஒருமுறை நோட்டம் பார்த்துக்கொண்டே இருவரும் நடந்தார்கள்.

" ஆமா, இந்தச் சாமியாடி அம்பலகாரர் அசலார் சொத்துக்கு ஆசைப்பட்டுக்கிடக்கிருராமே!...”

"ஆமா ஆமா சாமியாடி ஆட்டம் போட்டுத்தான் அம்மாம் சொத்துப்பத்தை வசப்படுத்தி வாய்க்குள்ளே போட்டு வச்சிருக்காரும். அசலான் சொத்தைத் தின்னவனை ஆத்தா வழிப்படுத்தி யிருக்காளா?...இந்தப் போகுடி மனுசங்கடத்தான் ஒருவகையிலே பாத்தாக்க, எனக்குச் சொந்தம் சோவாரியாட்டம்தான்! எங்கநகை நட்டும் நிலமும்கூட இந்தக் கிழம்கிட்டே ஆப்பிட்டுக் கிடக்குது...ம்!...”

"அப்பிடியா? அது கெடக் கட்டும்! ஆமா, இன்னெரு சம்சயம். இந்த வளவிக்கார ஐயா ஒனக்கு ஏதாச்சும் ஒறவுமுறையா அக்கா?” என்று பஞ்சவர்ணத் தின் பதுமை நிகர் எழில்விழிகளில் மயங்கிக் கேட்டாள்.

“என்னைப்பத்தி அத்துபடியாப்புரிஞ்சவ நீ, ஒனக்கே இப்பிடி யொரு ஐயம் கிளம்பியிருக்குது. கோவிந்தம்மா, என்னைப் பெத்த வங்கமூஞ்சிகூட எனக்கு ஞாபகமில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/90&oldid=611995" இலிருந்து மீள்விக்கப்பட்டது