பக்கம்:மருதாணி நகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 39

இந்த வளவிக்கார ஐயாதான் எம்பேரிலே அந்தக் காலந் தொட்டு உசிரையே வச்சுக்கினு இருப்பார்னு எங்க ஒண்ணுவிட்ட அப்பத்தாக் கிழவி முந்திச் சொல்லும். அதுதான் எனக்குப் புரிஞ்ச கதை. புரியாத மிச்சத்துக்கு ஆயி மகமாயிதான் ஆதாரம்!”

மெய்யப்பத் தேவர் சவுக்கத் தோப்பு விடைபெற்றது.

இருவருக்கும் எதிர்ப்பட்டு வந்த ஜனங்கள் அவ ரவர்கள் போக்கில்-அவரவர்கள் மனத்தடத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

முத்தையனின் வீடு நெருங்கிக் கொண் டே யிருந்தது.

வீடு நெருங்க, நெருங்க, பஞ்சவர்ணத்தின் மனம் "திக், திக் கென்று அடித்துக் கொண்டது.

அப்பொழுது, 'தங்கச்சி!” என்று கூப்பிட்டவாறு எதிர்ப்பட்டார் வளையல்காரக் கிழவர். "ஒனக்குச் சேதி தெரியாதில்ல? எங்க சொந்தக்காரப் பொடிசு அக்கரைச் சீமையிலேருந்து திடுதிப்பின்னு கு தி ச் சி ரு ச் சு. வெள்ளன. அங்காலே கூட்டிக்கிட்டு வாரேன்!” என்று சொற்களைப் பறக்க விட்டதுடன் நிற்காமல், அவரும் பறந்து கொண்டிருந்தார்.

" அந்தாலே வந்திருச்சு ஒங்க மச்சான் வூடு!”

என்று கோடி கூட்டிப் பேசிச் சுட்டிக் காட்டினுள், சுட்டிப்பெண் கோவிந்தம்மா.

பஞ்சவர்ணத்தின் நினைவுகளெல்லாம், முத்தைய னின்வாழ்க்கையைஉள்ளடக்கிக் காட்டிய ஆரம்பத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/91&oldid=611996" இலிருந்து மீள்விக்கப்பட்டது