பக்கம்:மருதாணி நகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மருதாணி நகம்

முடிவையுமே பற்றிச் சுற்றிக் கொண்டிருந்தன. ஆகவே சினேகிதியின் பேச்சை ரசிக்கும் நிலையில் இல்லை அவள். கூரைக்கட்டில் வேயப்பட்டிருந்த சீமை ஒடுகளின் செந் நிறம் அவளுக்கு அச்சத்தை வளர்த்தது; ஆதங்கத்தை வளர்த்தது. வீடு நெருங்க நெருங்க, அவளுக்குக் கால் ஓடவில்லை; இருதயத் துடிப்பும் கட்டுமீறி இயங்கியது; நொடிக்கு நூறு தரம் பெரு மூச்சைப் பிய்த்தெடுத்து வெளிப்படுத்தி விட்டாள்.

அதோ, முத்தையனின் இல்லம்!

என்ன விந்தை இது?

ல வ லே சங் கூ ட சத்தம்-சந்தடி இல்லையே? சுடுகாட்டு அமைதியைப் பிரதிபலிக்கிறதோ அந்த வீடு? கங்காணி கொடிகட்டி வாழ்ந்து, எட்டுக்கண் வீசப் புகழ் சேர்த்து விளங்கிய விவரங்கள் நேற்றைக் கதைதானே?

எடுத்த எடுப்பில் பஞ்சவர்ணத்தின் பார்வை வாசற் புறத்துக்குத் தாவியது. தீவினைக்குரிய எந்த ஓர் அடை யாளமும் அங்கு காட்சி கொடுக்கவில்லை !

நாகுடிச் செம்மறிக் கூட்டம் காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருந்தது.

மறுபகுதியில், வெள்ளாடு தலைச்சலுடன் தத்தி விளையாடிக்கொண்டும், அரசங் கொழுந்தைக் குதப்பிக் கொண்டும் கட்டுத்தறிக் கயிற்றுடன் 'மல்லு' பிடித்துக் கொண்டிருந்தது.

சேந்தங்குடிச் செவலைக் காளைகள் இரண்டும் தீவனத்தில் கண்ணும் கருத்துமாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/92&oldid=611997" இலிருந்து மீள்விக்கப்பட்டது