பக்கம்:மருதாணி நகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டல் கண்ட மயில்!

தேநீர்க் கடையில் நெரிசல் தாளவில்லை.

“என்னு தங்கச்சி, காலம்பற முச்சூடும் ஒன்னைக் கண்ணுப்புறத்தாலே காண்முடியலை கையிலே காசு வாயிலே தோசை'ன்னு சொல்லிச் சொல்லி என்ைேட வவுத்தை ரொப்பி வந்த நீ, இன்னிக்கு இத்தனை பொழுது வரைக்கும் என்னைக் காயப்போட்டுப்புட்டியே?. காயலாக் கெடந்தவனச்சுதே நான்?” என்ருன் கணக்கன் விடுதியான். -

“சரிங்க : இனிமெ இப்படி தாமசம் உண்டாகாது பெரியய்யா !” என்று ச மா தா ன ம் சொன்னுள் பஞ்சவர்ணம்.

"நேரம் உண்டன ஆகிருச்சு சுடுதண்ணி போட்டுக் குடு, ஆயி!” என்று துடித்தான் இளவட்டம் ஒருவன்.

சுடுதண்ணிரை ஊற்றி ஆற்றி ஈயக் குவளையில் நிரப்பி நீட்டினுள் கடையின் சொந்தக்காரி.

இளவட்டத்தின் முகம் வாட்டமுற்றது. "நீ இன்ன அக்கா, இப்பவந்து என்னைச் சோதிக்கிறே? சுடு தண் ணின்ன தேத்தண்ணின்னு அர்த்தம் பிளுங்குச் சீம்ை யிலேருந்து வந்த வழக்கம் இது அட, வாங்க நாகுடிச் சாமியாடி ஐயா!' என்று தன் கவலையுடன் போராடிய அவன், வந்தவரையும் வரவேற்கத் தவறவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/96&oldid=612001" இலிருந்து மீள்விக்கப்பட்டது