பக்கம்:மருதாணி நகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 95

இவ. அப்பன்-அதான் என்ளுேட ஒண்ணுவிட்ட பங்காளி மகன் எங்கையிலே அவன் சிண்டைக் குடுத்துப்புட்டு பட்ட பாடுகளை இந்தப் பொண்ணு அறிஞ்சிருக்குமோ ? சே! இதுக்கு அப்ப பால்குடி கூட மறந்திருக்காதே? இதுக்கு தன்னேட ஆயி அப்பனையே சரிவரத் தெரியவே நியாயமில்லையே? சரி, சரி, வரட்டும் ! இந்தக் குட்டி எங்கனே தப்பமுடியும்? இது நேசம் வச்சுக்கிட்டிருக்கிற அந்தப்பய மவன் கோலப்பன் இப்ப என்கையிலே சிக்கிக் கிட்டான் இல்லாங் காட்டி, அவனுக்கு தங்கத்தாலிச் சரட்டுக்கு வக்கு ஏது?

டீ குடித்தார் நாகுடிக்காரர்.

"மாரியப்ப அம்பலம்! கும்பிடு வருதுங்க!" என்று கைகூப்பிவந்தார் பட்டாமணியக்காரர் ஆவுடையப்ப அம்பலகாரர்.

மாரியப்ப அம்பலம் என்ற நாம கரணம் சூழ, நாகு டிச் சாமியாடி என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்ட பெரியவர், கி. மு. வைக் கண்டதும் சாயாக் குவளையுடன் எழுந்தார். மணியக்காரர் அமர்ந்ததைக் கண்டதும், அவ ரும் அமரலாஞர்.

புதிதாகச் சுட்ட உளுந்து வடைகளை ஆவுடையாா கோவில் சுளகில் வைத்துக் கொணர்ந்து, முகப்பில் இருந்த அலங்காரப் பலகையில் வைத்துவிட்டு, வேர்வை யைத் துடைக்கக்கூட நினைவிழந்து கடைப்பக்கம் பார்த்த போது, ஆவுடையப்ப அம்பலகாரரைக் கண்டு, ஓர் அரைக்கணம் அசந்து போய்விட்டாள். ஐயா பெரியவுக அத்திபூத்தாப்பிலே இங்காலே வந்திருக்காங்களே ? என்ற ஆச்சரியக்குறியை ஏந்தி விழி பரப்பலாளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/97&oldid=612002" இலிருந்து மீள்விக்கப்பட்டது