பக்கம்:மருதாணி நகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i அசல் நாட்டான்

இட்டுக் கட்டிச் சொன்ன பொய்யைப்போல, அந்திச் செவ்வானம் விளங்கியது.

மறு அரைக்கால் நாழிகைப் பொழுதிற்குள்ளாக, வானத்தின் செவ்வர்ணம் மறைந்து குழைத்த கறுப்பு ஒட்டிக்கொண்டது. பொய்யின் நிலை புலணுகி, உண்மை வெளிச்சமான கையுடன், பொய்யனின் முகத்தில் கரி பூசத்தானே செய்வார்கள் ?

கொண்டல் கண்ட கலாபம், எழிலாடும் பல் வண்ணத் தோகை விரித்து, வானவில்லுக்கு மறு பதிப்பாக ஒயில் சேர்த்து ஆடி மகிழ்வது இயல்பு.

பஞ்சவர்ணம் சிரித்தாள். எடுப்பாக அ ைம ந் த நாசியின் இடது பக்கத்து மூக்குத்தியின் ஒற்றை வெள் ளைக் கமலத்தில், கமலத்தின் ஒளி ரேகை ஓடியிருந்தது. அவ்வழகு, அவளது முகத்திற்கு மட்டுமல்லாமல், முகப் பரப்பிற்கே ஓர் அந்தமாக அமைந்து, ஓர் அந்தஸ்தையும் கொடுத்தது. அழகு கை கூடி வருவதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும். அந்த இனப்படி பார்த்தால், ஆவணத்தாங் கோட்டையில் ஒற்றைத்தனி விண் மீன் எனும்படி திகழ்ந்த பஞ்சவர்ணத்திற்கு அழகு இருந்தது போலவே அதிர்ஷ்டமும் இருந்து, இப்பொழுது அந்த நல்லதிர்ஷ் டம் தன் சுய ரூபத்தைச் சுட்டிக்காட்டியது. அழகும் பாக் யமும் ஒரே புள்ளியில் அமைந்திட்ட இரு குணக் கலவை கள் ஆயின. பின்னர், அவளது 'சுக்கிரதசை யின் மகி மைக்குக் கேட்கவும் வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/99&oldid=612004" இலிருந்து மீள்விக்கப்பட்டது