பக்கம்:மருதாணி நகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மருதாணி நகம்

அவள் வெளிவாசலுக்கு வந்தாள். எங்கும் வெறிச் சோடிக் கிடந்தது. அடுத்த குப்பத்து மச்சு வீட்டில் செவலைக்கிடாரி காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருந் தது. தொழுவம் நோக்கிப் பாய்ந்து சென்றது அண்டை வீட்டுக் காரரின் வெள்ளைப்பசு. பெட்டைக்கோழி ஒன்று செம்புழுதியில் வசமிழந்து தலையை அமுக்கியபடி சிலுப் பிக் கொண்டிருந்தது. சாயாக்கடை லாவாரம் இனி அம் புட்டுத்தான்,' என்று தன்னுள் ஒரு முடிவை வைத்து, வியாபாரக் கணக்கிற்கு ஒரு புள்ளிக் கணக்கு போட்டுப் பார்த்து, கல்லா'வை இழுத்து, காசு பணத்தை உள்ளங் கையில் கொட்டி எண்ணி, பிறகு, ஞாபகத்துடன், உண்டிக்கலயத்தை எடுத்து அதில் ஓர் எட்டணு பணத் தைப் போட்டுவிட்டு, அதே ஞாபகத்தின் நினைவுடனே ஒருவகைப்புட்ட எக்காளப் பெருமூச்சையும் விடுவித்தாள், நெடுமூச்சின் நெடுந்தடம் மாருமல் மறுகாமல் உள்ளே சென்ருள். மூடி திறந்து கிடந்தது கள்ளிப்பெட்டி ஒன்று. அதை அண்டினுள். தலைவசமாகத் தெரிந்தது கொட்டடி ரவிக்கை. அதில் குறுக்கு மறுக்காக மஞ்சள் புள்ளிகள் தட்டுமறித்திருந்தன. மேற்படி புள்ளிகள், புள்ளிமயில் வாகனனை ஓர் உருவத்தை அவளுள்ளாகச் சமைத்துக் காட்டியிருக்கவேண்டும்! ஆயாசம் மண்டிய கிலேசம், புகை நெருப்பானது. துயரத்தைச் சுமைதாங்கியாக்கி அவள் அதில் ஓய்வுபெற விழையாமல்,இனிய நினைவின் நிழலைத் தேடி ஒட்டியவள், கையுடன் எடுத்துச் சென்ற ரவிக்கையை இரண்டு கைகளிலும் பிரித்துத் திணித்து, மார்பகத்துச் சேலைத் துணியை நழுவவிட்டவளாக, அதே சடுதியுடன் ரவிக்கைக் கைகளை மடக்கிவிட்ட வண்ணம், தன்னில் தெரிந்த தன் எழில் மயக்கத்தில் பொட்டுப் பொழுது மயங்கிப் பின் தெளிவு கண்டு, மார்பகத்தில்

நிறைந்ததும் மனம் நிறைந்து, அப்புறம் மாராப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/100&oldid=612005" இலிருந்து மீள்விக்கப்பட்டது