பக்கம்:மருதாணி நகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் so

முகதலவை இழுத்து விட்டுக்கொண்டு, சுவரில் பதிந்தி ருந்த கண்ணுடித் துண்டத்தில் கண் பதித்துச் சொக்கிப் போன அஞ்சனமணிக் கண்களைக் கொக்கி போட்டு இழுத்துத் தன் வயமாக்கியவளாக, வெளிப்புறம் வந்தாள்.

ந ல் ல இரு ட் டு.

இருட்டினை ரசிப்பதற்குப் பழகியவள் அவள். சுடு காட்டில் பாதிச்சாமத்தில் பேய்க் கணங்களோடு தானும் குந்திக் குமைந்து, விதியின் நாடி பார்க்கத் தவம் இருப் பானுமே கம்பளத்தான், அவனுடைய வர்க்கமாகக் கூட அவளும் இடம் பெறலாம்-இருட்டினை அனுபவிக்கும்

பாங்கிலே!

நாட்டாமைக்கார ஐயா சொன்ன பேச்சு கைக்குமெய் யான தாக்கலாத்தான் இருக்கோணும்; அப்பிடிமட்டுக்கும் விதியும் லவிதமும் விதிச்சிருந்தாக்க அப்பாலே, என்னை சுத்தியிருக்கிற ஏழரை நாட்டான் பயணம் சொல்லிக்கிடா மக்கூட காடே வீடுன்னு பறிஞ்சிடும். ஆமா, ஆமா!...... ஆத்தாளே, ஒரு பொட்டை-ஒன்னை ஒடத்தவ இம்மாந் தூரம் பட்ட பாடு பத்தாதாங்காட்டி? எண்ணிக்கிடு மூத்தவளே, நீ கல்லு இல்லேங்கிறதை!... மத்தவங்க மனசுதான் செம்பூருங் கல்லாக்கும் ! ... நீமூத்தவ!...”

ர வி க் ைக ைய ப் பார்த்துக்கொண்டேயிருந்தாள் பஞ்சவர்ணம். ஆனால், ரவிக்கையை வியாழச் சந்தை யில் வாங்கி வந்து கொடுத்த கோலப்பனைப் பார்க்க முடியவில்லை. கோலப்பனைப் பற்றி நினைத்தபொழுது. அவனது அன்பு ஒரு பக்கமும், ஆத்திரம் மறுபக்கமும் குரல் கொடுத்தன. அன்பின் காரணத்தைக் கண்ட வளுக்கு, ஆத்திரத்தின் காரணத்தை இனம் காணமுடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/101&oldid=612006" இலிருந்து மீள்விக்கப்பட்டது