பக்கம்:மருதாணி நகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மருதாணி நகம்

வில்லை. தாபமும் தவிப்பும் சுழித்தோடின. கைவிளக்கைப் பொருதி வைத்துக்கொண்டு, குந்தினுள். எஞ்சியிருந்த சாயத் தண்ணீரைக் கலந்து ஒரு மிடறு குடித்து வைத் தாள். ஊறவைத்திருந்த அரிசியும் உளுந்தும் அவளுக்கு உண்டான கடமைகளைத் தொட்டுக் காட்டின போலும் !

மருக்கொழுந்துப் பூச்சரமும் தங்கச்சரடும் அவளு டைய அழகை வளர்த்தன வ ச ழ் த் தி யும் இருக்க வேண்டும்!

அடுப்பின் ஒரு பக்கத்தில் தெருப்பை மூட்டி, உலை வைத்துவிட்டு மறுபகுதியில் ஆக்கின குழம்புச் சட்டியை வைத்துச் சுண்டவைத்தாள். பின்னல், கடமையில் கண் பதிந்தது கடமைக்கும் கண் உண்டு '

நொடிக்கு நூறு தரம் அவள் ஏனே மணியக்காரர் ஆவுடையப்ப அம்பலகாரரை நினைத்துக் கொண்டாள். வாழ்க்கையின் அனுபவ முதிர்ச்சியினுல் நரை திரண்ட கேசத்தை நினைத்தாளா ? ஐம்பது பிராயத்தைக் கடந்த அயர்வின் தயக்கம் பிடிபடாமல், நிதானமாக வாழ்ந்து வரும் அவரது இல்லறப் பாங்கைக் கருதினுளா? எதை நினைத்தாளோ, எதை மறந்தாளோ? ஆளுல் ஒன்றை மட்டும் மறக்காமல் நினைத்தாள். அந்த ஒன்றுதான், அம்பலகாரரின் விலை மதிப்பற்ற-தேடக் கிடைக்காத அன்பு எனும் செல்வம் !

ஆவுடையப்ப அ ம் ய ல கார ர் நேருத்திரமாகச் செப்பினர்:

இந்தப் பாரு பஞ்சவர்ணம் எம் பேச்சை ஒங் காதிலே வாங்கிக்க அன்னிக்கு ஊருப் பஞ்சாயம் வச்சேன், முத்தையன் வம்புதும்பு நாளுக்கு நாள் வளர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/102&oldid=612007" இலிருந்து மீள்விக்கப்பட்டது