பக்கம்:மருத்துவக் கலைச் சொற்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்ச் சொற்கள் பண்டைய இலக்கியங்கள் முதற்கொண்டு பயன்படுத்தப் பெற்றுவந்த தமிழ்ச் சொற்களும் இக் கலைச்சொல் தொகுப்பில் காணக்கிடக்கின்றன. இது போன்ற சொற்கள் மறைந்துவிடாமல் மீண்டும் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும். எ.கா. குருதி மிடறு அடக்கம் - - - Blood Larynx Formula படைப்புச் சொற்கள்: வளர்ந்து வரும் அறிவியலின் தேவைக்கு ஏற்பப் புதுப்புதுக் கலைச்சொற்கள் உருவாக வேண்டும். இவ்வாறு புதிய கலைச் சொற்கள் , உருவாகுமாயின் செழித்தோங்கி வரும் அறிவியலை உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதுபோன்று உருவாகும் படைப்புச் சொற்கள் வேர்ச் சொல்லில் இருந்தோ, பொருள் அல்லது கருத்தை மையமாகக் கொண்டோ அமையலாம். Appendix எ.கா. வளரி - திரிபு, பிறழ்ச்சி - காரணவியல் - நோண்ட ல் - Aberration Aetiology dissection இலங்கைச் சொற்கள்: இலங்கையில் பயன்படுத்தப்பெற்றுவரும் மருத்துவத் தமிழ்க் கலைச்சொற்களும் இத்தொகுப்பில் உள்ளன. எ.கா. அகல்வாயி, வட்டகை - Bowl ஊறுநீர் Urine இரிவு Discharge அவிநீர் Sopp இக் கலைச்சொல் தொகுப்பினை மையமாகக் கொண்டு பொருத்தமான சொற்களைத் தெரிந்து கொள்ளலாம்.