பக்கம்:மருத்துவக் களஞ்சியம் தொகுதி - V.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

தமிழ் வளர்ச்சிக் கழகம் 'மருத்துவ களஞ்சியம்' என்ற தலைப்பில் வெளியிட்டுவரும் நூல் வரிசையில் இது 5-ஆவது தொகுதியாகும். இதில் மூன்று பாகங்கள் அடங்கியுள்ளன. முதல் பாகம் "மனித மூளை: அதனைப் பீடிக்கும் நோய்கள்" பற்றியும், இரண்டாம் பாகம் "மனநோய்" பற்றியும், மூன்றாம் பாகம் "நாளமில் சுரப்பி நோய்கள்: வளர்ச்சிப் பிழைகள்" பற்றியும் விளக்குகின்றன. இவற்றை முறையே, டாக்டர் தி.ச. கனகா, டாக்டர் ஓ. சோமசுந்தரம், டாக்டர் கு. கண்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஆசிரியர்கள் மூவரும், தத்தம் துறையில் பெயர்பெற்ற வல்லுநர் ஆவர். அவர்கள் மூவருக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உடலின் பல்வேறு மண்டலங்களையும், உறுப்புகளின் வளர்ச்சி, அவற்றின் இயக்கம், அவற்றைப் பீடிக்கும் நோய்கள், நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றையும் நல்ல தமிழில், அந்தந்தத் துறையில் வல்லுநர்களைக் கொண்டு எழுதி, தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டு வருகிறது. இம்முறைக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் குழுவிற்கும், நிர்வாகக் குழுவிற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

முகப்பு ஓவியம் வரைந்த திரு. ஏ.எஸ். நடராஜன் அவர்களுக்கும் அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த பாவை அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.


வா.செ.குழந்தைசாமி.