பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துரை

நேற்று, இன்று, நாளை; நடப்பவை, நடந்தவை நடக்க வேண்டியவை அனைத்தையும் கவனித்துத் தொடர்ச்சியாக, தேவையான முறையில்தான தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்.

வருடத்திற்கு வருடம் பருவத்திற்கு பருவம் மரம் செடி கொடிகளில் புதுப்புது மலர்கள் பூத்து, காய்கள் காய்த்து, பழங்கள் கனிந்து குலுங்கி மணமும் பயனும் சுவையும் தருவதைப் போலத்தான் தமிழிலும் காலத்தையொட்டிய மாறுதல்களும் கருத்துக்களும் பூத்து, காய்த்து கனிந்து பலன் தர வேண்டியது அவசியம்.

பல்வேறு தமிழ்க் கவிஞர்களாலும், தமிழ் வல்லுனர்களி னாலும் இன்றைய தமிழ் மணக்கிறது. பழங்காலத் தமிழ் மணம் மட்டும் போதாது.புதிய மணமும் வேண்டும். காலத்திற் கேற்ற கருத்துக்கள் அனைத்தும் தமிழில் எடுத்துக் கூறும் வன்மையைத் தமிழ் பெற வேண்டும். வேகமாக முன்னேறி வரும் புதுப்புது எண்ணங்கள் கருத்துக்கள் யாவையும் எழுத்தில் வடித்துத் தருவதற்குத் தமிழால் முடியும் என்ற அளவிற்கு தமிழ் வளர்ந்தால்தான் தமிழ் வளர்ச்சி அடைநதிருப்பதாகக் கொள்ள முடியும் எனவே தமிழ் நாட்டில் இத்தகைய சக்தியும் ஆர்வமும் கொண்ட பல்வேறு தமிழ் மேதைகள் தோன்ற வேண்டும். வசனகர்த்தாக்கள், புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அரசியல் தலைவர்கள் நிர்வாக நிபுணர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் ஏராளமாகத் தோன்ற வேண்டும். தமிழில் எல்லாக் கருத்துக்களையும் எண்ணங்களையும் உணர்த்த வேண்டும், எடுத்துக் கூற வேண்டும். நூலகள் எழுதி வெளியிட வேண்டும். போதிக்க வேண்டும்.

எல்லாம் தமிழால் முடியும் என்ற நிலைதான் தமிழின் வளர்ச்சி, தமிழனின் வளர்ச்சி தமிழ் நாட்டின் வளர்ச்சி என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் அதே எண்ணம் நம் தமிழ் பெருமக்களிடையே எவ்வளவுக்வெவ்வளவு ஆழமாக உறுதியாகப் பதிகின்றதோ அதே அளவுக்கு தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறக்கும், மணக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் தழைததோங்க தமிழால் முடியும் என்ற அந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் வளர வேண்டும் என்பதே