பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ΧΙV

லிருந்து வருங்காலச் சந்ததியினரைக் காப்பாற்றலாம் என்ற குறிப்பும் இருந்திருந்தால் இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும். அடுத்த பதிப்புகளில் இத்தகைய ஆலோசனைகளும் இடம் பெற்றால் மக்களுக்கு மேலும் பயன் தரக்கூடும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமின்றி செயற்படுத்தும் நோக்கோடு தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, மொழியியல், மருத்துவம் போன்ற துறைகளையும் தமிழில் கற்க முடியும் என்பதற்கான பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய பணிகளுக்கு மணவை முஸ்தபாவின 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம' கைகொடுக்கும்.

ம1.png


(மு. கருணாநிதி) முதலமைச்சர்