பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை

'சென்றிடுவீர் எட்டு திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'

என்ற பாரதியின் கனவை நினைவாக்கும் முயற்சியில் மட்டுமின்றி யுனெஸ்கோ கூரியர் இதழ்வழி தமிழர்தம் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பான செய்திகளை எட்டுத்திக் குக்கும் எடுத்துச் செல்லும் பணியிலும் மணவை முஸ்தபா ஈடுபட்டிருப்பது பாராட்டிற்குரியதாகும்.

ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் தரும் முயற்சி ஈழத்தில் 1852-லேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம் சில நூல்களை வெளியிட்டது. தமிழ்ப்பல்கலைக்கழகமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறது டேவிட் வெர்னர் ஆங்கில மருத்துவம் பற்றி எழுதிய நூல் இந்தியச் சூழலுக்கு ஏற்பத் திருத்தங்கள் செய்யப் பெற்றுத் தமிழில் 'டாக்டர் இல்லாத இடத்தில் என்று 1984 வாக்கில் வெளிவந்துள்ளது.

இத்தகைய பணிகளின் தொடர்ச்சியாக மணவை முஸ்தபா "மருத்துவக்கலைச்சொல் களஞ்சியம்’ என்ற இந்நூலை வல்லு நர்களின் உதவியோடு எழுதியிருக்கிறார். இந்நூல் சொல்லுக் குப் பொருள்தரும் அகராதியாக மட்டுமின்றி, நூலின் பெயருக் கேற்ப விளக்கம் தரும் கலைக்களஞ்சியமாகவும் திகழ்கிறது. «mer sprts “Viral haemorrhagic fever” arsia uspøż zußgsliv "கிருமிக் குருதிப் போக்குக் காய்ச்சல்' என்று பொருள் தருவ தோடு வெப்பமண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல்" என்று விளக்கமும் இதில் தரப்பட்டுள்ளது. poliomyelitis - என் பதற்கு 'இளம்பிள்ளைவாதம்' என்பதோடு முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. மூளைத் தணடி லும் முதுகுத்தண்டிலும் உள்ள முன்பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்கிருமி தாக்குவ தால் இது உண்டாகிறது' என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளக்கத்துடன் இளம்பிள்ளைக்கு ஐந்து வயதிற் குள் உரியவாறு சொட்டு மருந்து கொடுத்தால் இந்நோயி