இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7
அறிவியல் மருத்துவ நூல் எழுதுவார்க்கும் தகுந்த தமிழ் வழக்கை நாடுவார்க்கும் ஏற்றதொரு கையேடாகவும் இது விளங்கும்.
மேலும் விரித்துரைக்க நான் ஒரு மருத்துவனோ அறிவியல் துறையினனோ அல்ல, சுருங்கச் சொல்வதானால், இந்தக் களஞ்சியம் மருத்துவ அறிவியல் தமிழ் ஆக்கத்திற்கு அமைக்கப் பட்ட புதிய பாதையாகும். இந்தப் பாதையைப் பயன்படுத்தி நடப்போர் பலராகிடின் தமிழில் அறிவியல் கருத்துக்களைக் கையாளும் திறலும் அதனை வளர்க்கும் ஆர்வமும் மேலோங் கும் என்பது உறுதி.
காலமெல்லாம் தமிழ் ஆக்கப் பணியில் ஈடுபட்டுள்ள 'கூரியர்' ஆசிரியரும், கூரிய சிந்தனையாளருமான இதன் ஆசிரி யர் காலம் தேடும் தமிழன் மணவை முஸ்தபா அவர்கள் எவ் வளவு பாராட்டினும் தகும்! அவருக்கு-அவரது தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்.
27-11-1996 க. அன்பழகன் சென்னை-9 (கல்வியமைச்சர், தமிழ்நாடு அரசு)