பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/440

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


422

trichomoniasis (seucorrhoe) : யோனிக் குழாய் அழற்சி : பெண்டிருக்கு வெள்ளைப் போக்கினால் யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம், ஆண்களுக்குச் சிறுநீர் ஒழுக்குக் குழாயில் இது ஏற்படும்.

trichophytosis : முடிபடர்தாமரை : டிரைக்கோஃபைட்டான்' என்ற பூஞ்சணத்தினால் உண்டாகும் நோய், எ-டு: முடியில் அல்லது தோலில் ஏற்படும் படர் தாமரை நோய்.

trichuris : உருண்டைப் புழு : சாடடைப்புழு வகைகளில் ஒன்று.

trichuriasis , உருண்டைப் புழு நோய் : உருண்டைப் புழுவினால் உண்டாகும் குடல் நோய்.

tricuspid valve : மூவிதழ் ஓரதர்; மூவிதழ் : இதயத்தின் வலது துளைக்கும், கீழறைக்கும் இடையிலுள்ள மூவிதழ் ஓரதர்.

trigeminal nerve : முத்திற உணர்வு நரம்பு; முக்கிளை நரம்பு : இயக்கம், உணர்ச்சி, சுவை ஆகிய மூன்றையும் தூண்டும் மண்டை நரம்பு.

trigger finger: வளைவு விரல்; சுககால விரல் : விரல்கள் உதவியின்றி நீட்ட முடியாதபடி எப்போதும் வளைந்திருத்தல் தசை நாண் கடினமாவதால் இது உண்டாகிறது.

tri-iodo thyronine : கேடயச் சுரப்பி நீர்மம் : உடலின் வளர்சிதை மாற்றச் செய்முறையைப் பேணுவதில் பங்கு கொள்ளும் ஒரு கேடயச் சுரப்பி இயக்குநீர் (ஹார்மோன்).

trilene : டிரைலன் : டிரைக் குளோஎத்திலீன் என்ற நோவுத் தடை மருந்தின் வாணிகப் பெயர்.

trimeprazine: டிரைமெப்பிராசின் : தோல் அரிப்பு நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து. குழந்தைகளுக்கு அறுவை மருத்துவத்துக்குப் பின்பு பயன்படுத்தப்படுகிறது.

trimester : மும்மாதம்; மூன்று மாதக் காலம் : மூன்று மாதக்கால அளவு.

trimetaphan: டிரைமெட்டாஃபான்: குருதியற்ற கள அறுவை மருத்துவத்தில் இரத்த அழுத்தத்தைத் குறைப்பதற்கு நரம்பு ஊசிமூலம் கொடுக்கப்படும் தடை மருந்து. இது குறுகிய நேரம் செயற்படக்கூடியது.

trimethoprim : டிரைமெத்தோப்பிரிம் : ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து போலிக் அமிலங்களை பாக்டிரியாவுக்குத் தேவையான ஃபோலினிக் அமிலமாக மாற்றும் செரிமானப் பொருள் (என்சைம்) மீது தடை வினையை எற்படுத்துகிறது.

trimipramine : டிரைமிப்ராமின் : மனச் சோர்வினை நீக்கும் மருந்து. சிமிப்ராமினைப் போன்றது.

triostam : டிரையோஸ்டம் : உப்பின் மூலத் தனிமமாகிய சோடியத்தின் (வெடியம்) வாணிகப் பெயர்.

triple antigen : முத்தடுப்புக் காப்பு மூலம்: தொண்டை அழற்சி, கக்குவான், நசிப்பிசிவு ஆகிய நோய்களுக்கு எதிரான காப்பு மூலம்.

triploid : மூவினக் கீற்றுத்

தொகுதி : மூன்று இனக்கீற்றுத் தொகுதிகளைக் கொண்டுள்ள.

triplopen : டிரிப்ளோப்பென் : கடுமையான உறுப்பெல்லை நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் கலவைமருந்து. இது, பெனித்தாமின் பெனிசிலின்-G புரோக்கைன், பெனிசிலின்-C, சோடியம் பெனிசிலின்-G ஆகியவை அடங்கி யுள்ளன.