பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sintus

1004

skeleton


sinus : எலும்பு உட்புழை; குழிப்பை; குழிவுபுழை : மூக்கின் குறுகிய உட்புழை முகஎலும்புகளின் உள்ளறை.

sinusitis : காற்றறை அழற்சி; நெற்றி எலும்புப்புழை அழற்சி; எலும்புக் காற்றறை அழற்சி : மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சி கோளாறு.

siphon : உறிஞ்சுகுழல் ; ஒரு நீர்மத்தை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்திற்கு செலுத்தப் பயன்படுத்தப்படும், சமமற்ற நீளமுடைய இருகைகள் கொண்ட வளைகுழல், 2. உள் கழுத்துத் தமனி முடியும் 'எ' வடிவப்பகுதி.

sitophobia : உணவு வெறுப்புக் கோளாறு : மருந்துப் பொருள் மருத்துவத்தால் உண்டான பசியின்மையால் உண்டாகும் விரும்பத்தகாத அறிகுறிகளால் உண்ணுவதற்குப் பயம்.

sitz-bath : இடுப்புக் குளியல்.

sjogren syndrome : சுரப்புநீர்க் குறைபாடு : கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்புநீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இது ஏற்படுகிறது. இதனால், இமையிணைப்படல அழற்சி, நாக்கு உலர்தல், குரல் கரகரத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.

skeleton : எலும்புக்கூடு : இறந்த உடலின் தோல், தசை நீங்கிய எலும்பு உருவம்.