பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alloplasty

100

alpha-chymotrypsin


alloplasty : செயற்கைப் பதிப்பு : செயற்கைப் பதியப் பொருளால் உடலுறுப்பை சீரமைத்தல்.

allopsychic : புறச்சூழல் மன நோய்; புறச்சூழல் உளநோய் : புறச்சூழல் தூண்டுதலால் உண்டாகின்ற மனநோய்.

allopurinol : அல்லோபூரினால் : கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்திலிருந்து படிகப் படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது. கீல்வாத (சந்து வாதம் அல்லது ஊளைச் சதை நோய்) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறது. கீல்வாதம் அடிக்கடி வருவதைக் கணிசமாகக் குறைப்பதுடன், அதன் கடுமையினையும் குறைக்கிறது. தோல் பகுதியில் வேணற்கட்டி உண்டாக்குகிறது.

allorhythmia : சீரற்ற நாடித் துடிப்பு; சீரற்ற இதயத்துடிப்பு : இதயம் இயல்பின்றி துடிப்பது. இதயத்துடிப்பில் குறை. சீரின்றி துடிக்கும் இதயம்.

all or none : எல்லாம் அல்லது எதுவுமின்மை : இதயத்தின் இயக்க விதிகளில் ஒன்று. பலமில்லாதத் தூண்டல்கூட இதயத்தை இயக்க உதவும். இது வீரியம் நிறைந்தத் தூண்டலால் ஏற்படும் இதய இயக்கத்தை ஒத்திருக்கும்.

aloes : கற்றாழை இலைச்சாறு : சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத் தாவரத்தில் இருந்து பறித்த இலைகளில் இருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவை உடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து.

alopecia : தலை வழுக்கை; வழுக்கை; மயிர்க் கொட்டு; சொட்டை : தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனினும், அதிர்ச்சியும் கவலையும் வழுக்கை ஏற்படத் தூண்டும் பொதுவான காரணிகள் என்பன.

aloxiprin : அலோக்சிப்ரின் : அலுமினியம் ஆஸ்பிரின் மருந்தின் ஒரு கூட்டுப்பொருள். இது ஆஸ்பிரினை விடக் குறைந்தளவில் குடல் எரிச்சல் உண்டாக்குகிறது. சிறு குடலில் உடைந்து ஆஸ்பிரினை வெளி யேற்றுகிறது.

alophen : அலோஃபென் : ஃபினோல்ஃப்தலீன் என்ற மருந்தின் பெயர்.

alpha-chymotrypsin : ஆல்ஃபா கைமோட்ரிப்சின் : கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்). இது, பொதியுறைத்